
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் போக்குவரத்து காவலாளர்கள் நடந்த வாகன சோதனையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வழக்கில் ரூ.42 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. மகேஷ்குமார், காவலாளர்கள் வாகன சோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். அந்த உத்தரவின் பேரில், ஐந்து உள்கோட்டங்களில் உள்ள 31 காவல் நிலைய எல்லைப் பகுதியில் தினமும் காவலாளர்கள் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், நேற்று நடத்தப்பட்ட வாகன சோதனையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 28 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 203 பேர் மீதும், ஆவணங்கள், காப்பீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 219 பேர் என மொத்தம் 450 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, அவர்களுகு அபராதமும் விதிக்கப்பட்டது.
வழக்குப் பதியப்பட்ட 450 பேரிடமும் இருந்து ரூ.42 ஆயிரம் அபராதத் தொகையாக வசூல் செய்யப்பட்டது. மேலும், குடி போதையில் வாகனம் ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவலாளர்கள் அவர்களை எச்சரித்துள்ளனர்.