பெற்ற மகளுக்கு ஐந்து ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்துவந்த தந்தை கைது...

 
Published : Feb 09, 2018, 10:59 AM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
பெற்ற மகளுக்கு ஐந்து ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்துவந்த தந்தை கைது...

சுருக்கம்

Father arrested to give sexual harassment to daughter for five years

கரூர்

கரூரில் தாயின் புகாரால் ஐந்து ஆண்டுகளாக மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்த தந்தையை காவலாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், டி.கூடலூர் கட்டையம் குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபாலன், (38), டெய்லர். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த புளியம்பட்டியைச் சேர்ந்த செல்வமணிக்கும் (31) திருமணமாகி 14 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர்.

இவர்கள் கரூர் செங்குந்தபுரத்தில் குடும்த்தோடு வசித்து வந்தனர். இந்த நிலையில் கணவன், மனைவியிடையே கருத்துவேறுபாட்டால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அதே பகுதியில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

அப்போது மகள் தந்தையுடனும், மகன் தாயுடனும் தனித்து வசித்தனர்.இந்த நிலையில் தனது மகளுக்கு கணவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் என்று தாய் செல்வமணி நேற்று கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

இதனைத்  தொடர்ந்து காவலாளார்கள் ஜெயபாலனை போக்சோ சட்டம் அதாவது குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து தடுக்கும் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவர், உடனே சிறையிலும் அடைக்கப்பட்டார்.

 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!