அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் விஷம் குடித்து மரணம்; குடிபோதையில் தற்கொலை?

 
Published : Feb 09, 2018, 10:51 AM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் விஷம் குடித்து மரணம்; குடிபோதையில் தற்கொலை?

சுருக்கம்

Drinking and driving poisoning by the State Transport Corporation Suicide in drunkenness?

கன்னியாகுமரி

கன்னியாகுமயில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் விஷம் குடித்து மருத்துவனமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். விஷம் குடித்திருந்தபோது அவர் குடிபோதையில் இருந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், மணலிவிளை பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமணி (44). இவர் அரசுப் போக்குவரத்துக் கழக கன்னியாகுமரி பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.

இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று விஷம் குடித்த நிலையில் வீட்டில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் குடித்து இருந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் நுழைந்த அருகில் இருந்தவர்கள் சுந்தரமணியை மீட்டனர்.

பின்னர், அவரை குலசேகரம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இதுகுறித்து குலசேகரம் காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த சுந்தரமணிக்கு குமாரி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.

சுந்தரமணி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது யாரேனும் விஷம் வைத்து கொன்று விட்டனார? என்று பல்வேறு கோணங்களில் காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!