திருட்டுத்தனமாக ஆற்று மணல் கடத்தியவர் கைது; மினி டெம்போவும் பறிமுதல்...

Asianet News Tamil  
Published : Feb 09, 2018, 10:30 AM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
திருட்டுத்தனமாக ஆற்று மணல் கடத்தியவர் கைது; மினி டெம்போவும் பறிமுதல்...

சுருக்கம்

man arrested for smuggling sand Mini tempo seized...

காஞ்சிபுரம்

திருட்டுத்தனமாக ஆற்று மணல் கடத்தியவரை காவலாளர்கள் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய மினி டெம்போவையும் பறிமுதல் செய்தனர்

காஞ்சீபுரம் மாவட்டம், கீழ்கதிர்ப்பூரில் உள்ளது வேகவதி ஆறு. இந்த ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுகிறது என்று பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலையத்திற்கு அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

அதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளார் எஸ்.பிரபாகர் மற்றும் காவலாளார்கள் வேகவதி ஆற்றுக்கு சென்றார். அப்போது மினி டெம்போவில் மணல் ஏற்றி கொண்டிருந்ததை கண்டு அவர்களை பிடிக்க விரைந்தனர். காவலாளர்களை கண்டதும் மணல் கடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர்.

பின்னர், அவர்களை மடக்கிப் பிடித்த காவலாளர்கள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்  பெரிய காஞ்சீபுரம் வெள்ளக்குளம் தெருவை சேர்ந்த கொட்டல் வீரணன் (38) என்பவர் திருட்டுத்தனமாக மணல் கடத்தியது தெரியவந்தது.

அதன்பிறகு அவரை காவலாளர்கள் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி டெம்போவையும் காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.

 

PREV
click me!

Recommended Stories

கூட்டணிக்கு வடிவம் கொடுத்த பியூஸ் கோயலுக்கு தடல் புடல் விருந்து வைத்த இபிஎஸ்
அரையாண்டு, பொங்கல் விடுமுறையை தொடர்ந்து மீண்டும் தொடர் விடுமுறை.. குஷியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள்!