அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று தருகிறோம்...! ரூ.3 லட்சம் மோசடி செய்த போலி நிருபர்கள் மீது புகார்....!

 
Published : May 08, 2018, 04:47 PM ISTUpdated : Sep 19, 2018, 02:20 AM IST
அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று தருகிறோம்...! ரூ.3 லட்சம் மோசடி செய்த போலி நிருபர்கள் மீது புகார்....!

சுருக்கம்

Rs.3 lakh fraud on couple lieing reporters erode

அரசின் நலத்திட்ட உதவிகளை சுலபமாக பெற்று தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து 3 லட்சம் ரூபாயை மோசடி செய்த போலி நிருபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, வளையக்கார வீதியைச் சேர்ந்தவர் மோகன் ராஜ். இவரது மனைவி கிரிஜா. இவர்கள் இருவரும் வார பத்திரிக்கை ஒன்றில் பணியாற்றி வருவதாக அப்பகுதி மக்களிடம் கூறியுள்ளனர்.

மேலும், தங்களுக்கு அரசு அதிகாரிகள் நெருக்கம் உள்ளதாகவும் அப்பகுதி மக்களை நம்ப வைத்துள்ளனர். காவல் துறை அதிகாரிகளிடம நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களைக் காண்பித்தும் தங்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளனர்.

அவர்கள் இருவரும், பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், முதியோர் உதவித்தொகை போன்ற அரசின் திட்டங்களை சுலபமாக பெற்று தருவதாக கூறி வளையக்காரவீதி, கருங்கல்பாளையம், பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் 3 லட்சம் வரை பணம் பெற்றுள்ளனர். 

ஆனால், குறிப்பிட்டபடி அவர்கள் எந்தவித நலத்திட்ட உதவிகளையும் பணம்  கொடுத்தவர்களுக்கு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட நபர்கள், மோசடியில் ஈடுபட்ட கணவன் - மனைவி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரோடு எஸ்பியிடம் புகார் அளித்தனர்.

PREV
click me!

Recommended Stories

அதிகாலையில் சவுக்கு சங்கர் வீட்டிற்கு சுத்துபோட்ட போலீஸ்! மொத்த டீமும் கைது.? பின்னணி என்ன?
தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு! ரூ.48,000 உதவித்தொகை! விண்ணப்பிப்பது எப்படி?