
கோடை காலத்தில் மகளை குளிர்விக்கும் வண்ணமாக, கோடை மழை பெய்து வருகிறது.
வெயில் தாக்கம் தாங்க முடியாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ள சமயத்தில், ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி அதிக வெயில் உள்ளது.
குறிப்பாக வேலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக வெப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக கோடை மழையும் ஆங்காங்கு பெய்து வருகிறது.
அதன் படி, தேனி மாவட்டத்தில் தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து உள்ளது
மேலும் நேற்று மாலை பெய்ய தொடங்கிய மழை இரவு முழுக்க தொடர்ந்து பெய்து வந்ததால், சோத்துப்பாறை அணையில் அதன் முழுகொள்ளளவான 126 அடியை எட்டியுள்ளது.
மேலும் நெல்லை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேலும், சேலம் ஏற்காடு செங்கோட்டை பகுதிகளிலும் தொடர் மழை பெய்து உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்
மேலும் வாட்டி எடுத்த கோடை வெயிலில் கோடை மழை பெய்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.