பெண் குழந்தைன்னா இப்படித்தான் செய்வீங்களா...? – மனசாட்சியே இல்லையா..?

First Published May 8, 2018, 12:55 PM IST
Highlights
girl child in dustbin


நெல்லுக்கும் கள்ளிப்பாலுக்கும் தப்பி வன்புணர்வு குடும்பவன்முறை காதலினின் கத்திக்குத்து என அத்துனை வன்முறையிலிருந்து தப்பி பெண் உயிர் வாழ்வது என்பதே சாதனைதான். இதோ இங்கும் தப்பிப் பிழைத்த சின்னவளும் இருக்கிறாள்

வானம் அப்போதுதான் கோடைமழையின் சின்ன தூறல்களை போட்டு நிலத்தை நனைத்திருந்தது. சேலத்தின் கரட்டு காட்டில் இரவு நேரம் ஆள் நடமாட்டம் இன்றி இருந்தது.

சண்முகவேலும் அவரின் சில நண்பர்களும் சேர்ந்து நடந்து போய்க்கொண்டிருந்தனர். திடீரென்று ஒரு சிறு குழந்தை அழும் சத்தம் கேட்டது. பூனையின் குரலாக இருக்கும் என்று எண்ணி அந்த சத்தத்தை மீறி நடந்தனர்.

மீண்டும் குழந்தை அழும் குரல் கேட்க, சத்தம் கேட்ட சத்தம் கேட்ட திசையை நோக்கி அனைவரும் நடந்துபோய் பார்க்க அங்கிருக்கும் குப்பை தொட்டியில் ஒருகல் கிடந்த்து அதை எடுத்துவிட்டு பார்க்க  அரிசி பையில் அப்போது பிறந்து இன்னும் தொப்புள் கொடிகூட வெட்டாத பச்சிளம் பெண்குழந்தை இருந்தது.

பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி. இப்படியும் மனிதர்கள் செய்வார்களா என்ன? தனக்கு வேண்டாத பிள்ளையை குப்பையில் வீசினாலும் பிறர் எவரேனும் பார்த்து எடுத்து வளர்த்துக்கொள்வார்கள் அதன் மீது கல்லை தூக்கி வைக்கும் மனம்தான் எத்தணை கொடூரமானது.

பார்த்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கும்  108க்கும் போன் செய்து வரவழைத்து குழந்தையை ஒப்படைத்தனர். கல்லைத்தூக்கி வைத்திருந்ததில் பிஞ்சு குழந்தையின் கால் முறிந்திருந்தது. இந்த நிகழ்வு தாங்க முடியாத  துயரத்தை கொடுத்துள்ளது இன்னும் அழுத அந்த சின்னவளின் குரல் காதில் கேட்டுக்கொண்டே இருப்பதாக குழந்தையை காப்பாற்றிய சண்முகவேல் கூறுகிறார்.

click me!