6 ஜனாதிபதிகளை தந்த சென்னை பல்கலைக்கழகம்..! ஜனாதிபதியே புகழாராம்..!

First Published May 8, 2018, 2:49 PM IST
Highlights
chennai anna university gave 6 presidents ton india


இந்தியாவுக்கு 6 ஜனாதிபதிகளை தந்த பல்கலை கழகம் சென்னை பல்கலை கழகம் என்று பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் தெரிவித்து உள்ளார்

சென்னை பல்கலை கழகத்தின் 160 ஆவது பட்டமளிப்பு விழா சென்னை பல்கலை கழக நூற்றாண்டு விழா அரங்கில் கடந்த சனிக்கிழமை  நடைப்பெற்றது.

அப்போது பேசிய ஜனாதிபதி,

இந்தியாவின் 19  ஆவது  நூற்றாண்டின் இடைப்பட்ட  காலத்தில்  தொடங்கப் பட்ட இந்த  பல்கலை கழகம்  மிக சிறந்த பல்கலைக்கழகமாக உருவெடுத்து உள்ளது

பாரம்பரிய கட்டிட கலையுடன் கம்பீரமாக நிற்கும் இந்த பல்கலை கழகத்தில் இருந்து டாக்டர் ராதா கிருஷ்ணன்

 

விவி கிரி

நீலம் சஞ்சீவ ரெட்டி

ஆர்  வெங்கட்ராமன்,

கே ஆர் நாராயணன்அப்துல்கலாம்

ஆகிய 6 மிக சிறந்த ஜனாதிபதிகளை தந்துள்ளது இந்த பல்கலை கழகம் என ராம் நாத் கோவிந்த் தெரிவித்து உள்ளார்

அதுமட்டுமில்லாமல் நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி ராமன், சுப்பிரமணியன் சந்திர சேகர் ஆகியோரும் இந்த பல்கலை கழகத்தின் மாணவர்கள் தான்.

சுப்பாராவ், பதஞ்சலி சாஸ்திரி என்ற இரண்டு தலைமை நீதிபதிகளையும், சரோஜினி நாயுடு சி.சுப்பிரமணியன் மத்திய விவசாய துறை அமைச்சராக   இருந்தபோது தான் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது

மேலும் செஸ் வீரர் விஸ்வநாத் ஆனந்த், தொழிலதிபர் இந்திரா நூயி ஆகியோரும் இந்த பல்கலை கழகத்தில் படித்தவர்கள் தான் என பெருமையாக  பேசினார்

மேலும், நாம் உயர்கல்வியில் ரோபோடெக்ஸ், நானோ தொழில் நுட்பம் ஆகியவற்றில் உலக நாடுகளுடன் போட்டி போட வேண்டிய தருணத்தில் உள்ளோம் என பேசினார்

click me!