இசிஆரில் தப்பு செஞ்சது எல்லாம் அதிமுகவினர்.! பழி மட்டும் திமுக மீதா.? இறங்கி அடிக்கும் ஆர்.எஸ்.பாரதி

தமிழகத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்களுக்கு அதிமுகவினரே காரணம் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டியுள்ளார். இசிஆர் சாலை சம்பவம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் அதிமுகவினர் என்றும், எடப்பாடி பழனிசாமி வேண்டுமென்றே திமுக மீது அவதூறு பரப்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

RS Bharati alleged that the AIADMK was involved in the ECR incident KAK

தமிழகத்தில் தொடரும் குற்றசம்பவங்கள்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொலை, பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திமுக அரசு மீது எதிர்கட்சிகள் கடும் குற்றச்சாட்டை கூறி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக கூறி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இசிஆர் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தொடர்புடையது அதிமுகவினர் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவலில்,

Latest Videos

தமிழ்நாட்டில் எந்த ஒரு குற்றச் சம்பவம் நடைபெற்றாலும் அதைத் திராவிட முன்னேற்ற கழகத்தோடு தொடர்புபடுத்த வேண்டும் என்ற தீய உள்நோக்கத்தோடு எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து முயன்றுவருகிறார். இது இன்று வெட்டவெளிச்சமாக வெளியே வந்துவிட்டது. ஆனால், அவர் குற்றம் சாட்டிய பல விசயங்களில் அதிமுகவினரே தொடர்புகொண்டுள்ளனர். ECR சாலையில் பெண்கள் பயணித்த காரை சிலர் வழிமறித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சந்துரு அதிமுகவை சார்ந்தவர். கைது செய்யபட்டவர் பயணித்த கார் நிலகிரி மாவட்ட அதிமுக செயலாளருடைய சகோதரர் மகனுக்குச் சொந்தமானது என குறிப்பிட்டுள்ளார். 

இசிஆரில் பெண்களை துரத்திய இளைஞர்கள் யார்.? இரவோடு இரவாக 5 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்

குற்ற சம்பவங்களில் அதிமுக

திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் அதிமுகவை சார்ந்தவர். ராமேஸ்வரத்தில் பெண்கள் உடைமாற்றும் அறையில் கேமரா வைத்தவர் அதிமுக பிரமுகர். அண்ணாநகர் சிறுமி வழக்கில் கைது செய்யப்பட்டவர் அதிமுகவை சார்ந்த வட்டசெயலாளர் சுதாகர். படப்பை பகுதியைச் சார்ந்த குன்றத்தூர் ஒன்றிய அதிமுக எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் பொன்னம்பலம் வீட்டில் வடைக்கு இருந்த பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் நெல்லை, ராதாபுரத்தில் சிபு ஆண்டனி என்ற ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி. அவருக்கு சொந்தமான 60 சென்ட் நிலத்தை எழுதி வாங்கி அபகரிக்க முயன்ற முடவன்குளத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சுப்பிரமணி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் விருதுநகர் நரிக்குடி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சந்திரன் தலைமையிலான கும்பல் ஆயுதங்களுடன் சென்று, கே.சி.பிரபாத் என்பவரையும், அவரது குடும்பத்தினரையும் வீடு புகுந்து தாக்கி, ரவுடித்தனம் செய்தனர். அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைச் செயலாளர் திருமுருகன், சிஏ படிக்கும் மாணவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், முகத்தில் ஆசிட் வீசி கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை! அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்!

திமுக மீது பழி போடும் அதிமுக

கடந்த ஆகஸ்ட் மாதம், காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஓய்வுபெற்ற பெண் இன்ஸ்பெக்டரை ஹெல்மெட்டால் அடித்து கொலை செய்த வழக்கில் அதிமுக பிரமுகர் பிரபு கைது செய்யப்பட்டுள்ளார். இப்படி இன்னும் எத்தனையோ குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளோர் எல்லாம் அதிமுகவினரே. ஆனால் அதை எல்லாம் மறைத்து, மக்களை திசை திருப்பும் நோக்கில் வேண்டுமென்றே திமுக மீது அவதூறு பரப்பி வருகிறார் பழனிசாமி. அதிமுகவினர் செய்யும் தவறுகள் அனைத்தையும் திமுகவினர் மீது பழிபோட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மக்கள் போற்றும் நல்லாட்சி நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக திமுக எல்லா தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றது. மக்களிடம் திமுக அரசாங்கம் பெற்றுள்ள நற்பெயரைக் குலைப்பதற்கு, திட்டமிட்ட வகையில் அதிமுக முயற்சி செய்து வருகின்றது என்பதையே ECR சாலையில் பெண்கள் பயணித்த காரை வழிமறித்த விவகாரம் காட்டுகின்றது ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார். 

click me!