காசா கிராண்ட் ஐடி ரெய்டு: கணக்கில் வராத ரூ.600 கோடி கண்டுபிடிப்பு; ரொக்கமாகச் சிக்கிய ரூ.4 கோடி!

By SG Balan  |  First Published Nov 6, 2023, 11:10 PM IST

கணக்கில் வராத ரூ.600 கோடி பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. ரூ.4 கோடி பணமும் வருமான வரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


காசா கிராண்ட் நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடந்ததிய சோதனையில் கணக்கில் வராத ரூ.600 கோடி பணம் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், ரூ.4 கோடி பணம் வருமான வரி சோதனையின் மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காசா கிராண்ட் கட்டுமான நிறுவனம் சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வருகிறு. இந்த நிறுவனத்தில் நவம்பர் 3ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இத்துடன் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்பு உள்ள இடங்களிலும், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனம் தொடர்பான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

தீபாவளிக்கு மறுநாளும் லீவுதான்... மகிழ்ச்சியா கொண்டாடுங்க: தமிழக அரசு வெளியிட்ட சர்ப்ரைஸ் அறிவிப்பு

திருவான்மியூரில் இருக்கும் காசா கிராண்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், அந்நிறுவன உயர் அதிகாரிகளின் வீடுகள் என பல இடங்களில் ஐ.டி. ரெய்டு நடைபெற்றது. தலைமை அலுவலகத்தில் மட்டும் பத்துக்கும் அதிகமான அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

கோவையிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது. அங்குள்ள காசா கிராண்ட் இயக்குநர் செந்தில் குமார் வீட்டில் அதிகாரிகள் சோதனையிட்டனர். இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ.600 கோடி பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. ரூ.4 கோடி பணமும் வருமான வரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை மூலம் ரூ.250 கோடி கண்ணில் வராதது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் தகவல் கிடைத்துள்ளது.

உங்க வீட்ல வாஸ்து தோஷம் இருக்கா? இந்த வாஸ்து பரிகாரம் செய்தால் போதும்... எல்லாமே சக்சஸ் தான்!

click me!