ஓசூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.27 லட்சத்து 2 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மாநில எல்லை பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மற்றும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்படும் பணம் மற்றும் மது பாட்டில்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று பறக்கும் படை அதிகாரிகள் ஓசூர் அருகே உள்ள கர்னூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காடுலக்கசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 26) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற 25 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல பறக்கும் படை அதிகாரிகள் மாநில எல்லையான சம்பங்கிரி எல்லையில் சோதனை செய்தபோது கர்நாடக மாநிலம் சின்ன திருப்பதி அருகே உள்ள லக்கசந்த்ரா கிராமத்தைச் சேர்ந்த ராணி (59) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு சென்ற ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர்; பூரண கும்ப மரியாதை வழங்கிய நிர்வகிகள்
அதேபோல ஓசூர் அருகே உள்ள பூனப்பள்ளி சோதனை சாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையின் போது பெங்களூரை சேர்ந்த கல்குவாரி அதிபர் தர்ஷன் (45) என்பவர் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 72 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மூன்று இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட 27 லட்சத்து 2000 ரூபாய் ரொக்க பணத்தை ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்காவிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் ஓசூர் சார் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.