2019ல் பாலை குடித்து ருசிகண்ட பூனை மீண்டும் வருகிறது; ஏமார்ந்து விடாதீர்கள் முதல்வர் குறித்து வானதி விமர்சனம்

By Velmurugan s  |  First Published Apr 9, 2024, 11:37 AM IST

2019ல் பிரதமர் மோடிக்கு எதிரான பொய் பிரசாரம் என்ற பாலை குடித்து வெற்றி என்ற ருசியை கண்ட பூனை மீண்டும் அதே என்னத்தோடு வருகிறது. அதனை மக்கள் நம்பி ஏமாறக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் குறித்து சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதியை ஆதரித்து அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நடக்க இருப்பது மாநிலத்தில் யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்கான தேர்தல் இல்லை. மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்கான தேர்தல். எதிர்க்கட்சிகள் வந்தால் யார் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்வியை மக்கள் அவர்களிடம் முன் வைக்க வேண்டும். வழக்கமாக ஊரில் தண்ணீர் வரவில்லை என கவுன்சிலரிடம் கேட்டால் எனக்கா ஓட்டு போட்டீர்கள் என கேட்பார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து 1 எம்பி கூட இல்லாத நிலையில் திருவள்ளூர் தொகுதிக்கு 12 லட்சம் குடும்பங்களுக்கு அரிசி இலவசமாக கொடுக்கப்பட்டு வருகிறது. 

மாவட்டத்தில் உள்ள 1.15 லட்சம் விவசாயிகள் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் பெற்று பயனடைந்து வருகின்றனர். 1.55 லட்சம் வீடுகளுக்கு கழிப்பிடம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. பாஜக எம்பி இல்லாமலே திட்டங்கள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் பாஜக எம்பி இருந்தால் ஏகப்பட்ட திட்டங்கள் கிடைக்கும். வீடு இல்லாத ஏழைகளுக்காக வீடுகள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, முத்ரா கடனுதவி என பல திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

Tap to resize

Latest Videos

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர்; பூரண கும்ப மரியாதை வழங்கிய நிர்வகிகள்

உலக நாடுகள் மத்தியில் இந்தியாவா என்று சொல்லி வந்த நிலையில் தற்போது ஓ இந்தியாவா என்று கூறும் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் நாள்தோறும் பொய்களை சொல்லி வருகிறார். 2019ல் இந்த பூனை பாலை குடித்து ருசி கண்டதாகவும், மோடி தமிழ்நாட்டிற்கு எதிரானவர் என பொய்யை சொல்லி மக்களின் மண்டையை கழுவி அனைத்து எம்பிக்களையும் ஜெயித்தார்கள். தற்போது மீண்டும் அந்த பூனை பாலை குடிப்பதற்காக வருகிறது. மக்கள் ஏமாற கூடாது என்றார்.

ஏழை குழந்தைகள் படிக்கும் பள்ளியில் எந்த வசதியும் இல்லை. பள்ளிகளில் கொடுக்கப்பட்டு வந்த லேப்டாப் நிறுத்தப்பட்டுள்ளது. தாலிக்கு தங்கம் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த சைக்கிள் முறையாக கொடுப்பதில்லை. எதுவெல்லாம் நல்ல திட்டங்களோ அதனை எல்லாம் நிறுத்தி விட்டார்கள். பேருந்தில் இலவச பயணம் என கூறும் நிலையில் பேருந்துகளே வருவதில்லை. அனைத்து பெண்களுக்கும் என கூறிவிட்டு தற்போது மகளிர் உரிமை திட்டம் அனைவருக்கும் வரவில்லை.

பொள்ளாச்சியில் பிரபல கோழிப்பண்ணையில் இருந்து ரூ.32 கோடி பறிமுதல்? வருமான வரித்துறை அதிரடி

சமூகநீதி, பெண்ணுரிமை பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் அவரது மகனை மட்டும் அமைச்சராக்கினார். அவரது மகளை கொண்டு வரவில்லை. முதலமைச்சர் வீட்டில் கூட  பெண் குழந்தைக்கு சமூக நீதி இல்லை. திமுக தலைவர் பதவிக்கு பட்டியல் இனத்தவர் ஒருவர் வர முடியுமா? ஆனால் பாஜக மாநில தலைவர் பதவிக்கு பட்டியல் இனத்தவரை கொண்டு வந்தோம். அருந்ததியரை மத்தியில் அமைச்சர் ஆக்கினோம். பட்டியல் இனத்தவருக்கு தமிழ்நாட்டில் முக்கிய துறைகள் ஒதுக்கப்படுவதில்லை. மோடி அரசில் 11பெண் அமைச்சர்கள் இருக்கின்றனர். 

திமுக, காங்கிரெஸ் கூட்டணி எம்பிக்கு வாக்களித்தால் அவரால் பாராளுமன்றத்தில் கேள்வி மட்டுமே கேட்க முடியும் எனவும், டெல்லிக்கு சென்று அமைதியாக இருப்பதற்கு எதற்கு ஒரு எம்பி எனவும், பாஜக வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என வானதி சீனிவாசன் கேட்டு கொண்டார்.

click me!