மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர்; பூரண கும்ப மரியாதை வழங்கிய கோவில் நிர்வாகம்

By Velmurugan s  |  First Published Apr 9, 2024, 10:48 AM IST

உலகபுகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சிறப்து தரிசனம் மேற்கொண்டார்.


மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாமக்கல், திருவாரூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு நேற்று இரவு மதுரையில் தங்கினார். பின்னர் இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் சாமி தரிசனம்  செய்ய வருகை தந்தார்.

இதனால் அவர் தங்கியிருந்த. விடுதி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரை பலத்த போலீஸ்  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் வருகையை முன்னிட்டு,  மதுரை  மீனாட்சி அம்மன் கோவிலில் காலை 9 மணி முதல் 10 மணி வரை பக்தர்களுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி வழங்கப்படவில்லை.

Latest Videos

undefined

வனத்துறைக்கு போக்கு காட்டும் சிறுத்தை... மயிலாடுதுறையில் டூ தஞ்சாவூருக்கு தப்பிவிட்டதா.? பொதுமக்கள் அச்சம்

தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். முன்னதாக,கோவில் நிர்வாகம் சார்பில் மத்திய அமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மனை சாமி தரிசனம் மேற்கொள்வதற்கு முன்பாக அங்குள்ள முக்குருணி விநாயகரை தரிசனம் செய்துவிட்டு மீனாட்சி அம்மனையும், சுவாமியையும் தரிசனம் செய்தார்.

பொள்ளாச்சியில் பிரபல கோழிப்பண்ணையில் இருந்து ரூ.32 கோடி பறிமுதல்? வருமான வரித்துறை அதிரடி

பின்னர் கோவிலில் அமைந்துள்ள பொற்தாமரை குளத்தின் முன்பாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து அரை மணி நேர சாமி தரிசனத்திற்கு பின் மதுரை விமான நிலையம் புறப்பட்டுச் சென்றார்.

click me!