ஓய்வு எடுக்க வேண்டிய காலத்தில் பலாப்பழத்தை சுமக்கும் ஓபிஎஸ்: வைகை செல்வன் சாடல்!

By Manikanda Prabu  |  First Published Apr 9, 2024, 11:32 AM IST

ஓய்வு எடுக்க வேண்டிய காலத்தில் பலாப்பழத்தை சுமந்து கொண்டு ஓபிஎஸ் தட்டு தடுமாறி வாக்கு சேகரித்து வருவதாக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் சாடியுள்ளார்


தஞ்சை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசனை ஆதரித்து தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மண்ணில் மத வெறி சக்திகள் தலை தூக்கி விடக் கூடாது. பரிவார் அமைப்புகள் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் இந்த மண்ணில் தலை தூக்கி விட்டால், தீவிரவாதம் அதிகமாக வளர்ந்து விடும். சிறுபான்மை மக்கள் நசுக்கப்படுவார்கள். அடவாடித்தனம் தலைவிரித்து ஆடிவிடும் எனவே பா.ஜ.க.விற்கு மறந்தும் வாக்களித்து விடாதீர்கள் என கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், வயதான காலகட்டத்தில் ஓய்வு எடுக்க வேண்டிய காலகட்டத்தில் ராமநாதபுரம் மண்ணில் ஒபிஎஸ் பலாப்பழத்தை சுமந்து கொண்டு தட்டு தடுமாறி வாக்கு சேகரித்து கொண்டு இருக்கிறார் என கிண்டலடித்தார்.

Latest Videos

எங்கெல்லாம் அநீதி ஏற்படுகிறதோ அங்கெல்லாம் நான் விசுவரூபம் எடுப்பேன் என்று சொல்கிறார். நீங்கள் விசுவரூபம் எடுத்தாலும் சரி பாபநாசம் படம் எடுத்தெல்லாம் சரி உங்கள் படம் இனிமேல் ஓடாது. விசுவரூபம், பாபநாசம் படம் எடுத்த கமலஹாசனே டார்ச் லைட்டில் பேட்டரி இல்லாமல் அறிவாலயத்தில் கொத்தடியாமையாக கிடக்கிறார் என வைகை சாடினார்.

சமோசாக்களில் கிடந்த ஆணுறை: பிரபல ஆட்டோமொபைல் நிறுவனத்தில் அதிர்ச்சி!

உங்களுக்கு தெரியாதா பன்னீர்செல்வத்தின் கதை அவ்வளவுதான். ஓ.ஏ.பி. பென்சனுக்கு முயற்சி செய்யலாமே தவிர, உங்களுக்கு எதிர்காலம் கிடைக்காது என ஓபிஎஸ்சை வைகை செல்வன் விமர்சனம் செய்தார்.

மேலும், போதை பொருளுக்கு உடந்தையாக இருக்கும் நீங்கள் தமிழ்நாட்டு மக்களை எப்படி காப்பாற்ற முடியும் என முதல்வர் ஸ்டாலினுக்கு வைகை செல்வன் கேள்வி எழுப்பினார். கல்லூரி, பள்ளி மாணவர்கள் போதை பொருளால் அடிமை ஆகி உள்ளனர். இப்படிப்பட்ட ஆட்சிக்கு மரண அடியை தர வேண்டும் என கூறி வைகை செல்வன் வாக்கு சேகரித்தார்.

click me!