ரூட்டு தல மாணவர்களுக்குள் மோதல் - பஸ் கண்ணாடி உடைப்பு

 
Published : Oct 20, 2016, 12:55 AM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
ரூட்டு தல மாணவர்களுக்குள் மோதல் - பஸ் கண்ணாடி உடைப்பு

சுருக்கம்

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மாணவர்களுக்குள் ஏற்பட்ட ரூட்டு தல மோதலில் அந்த வழியாக வந்த பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.

சென்னையில் பேருந்தில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது . இதில் அதிகம் பாதிக்கப்படுவது பேருந்துகளும் , பயணிகளும் தான். 

நேற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் யார் பெரியவர் என்ற போட்டி பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் , நந்தனம் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்டது. பூந்தமல்லி நெடுஞ்சாலை தாஷப்பிரகாஷ் ஹோட்டல் அருகே இரண்டு தரப்பினரும் மோதிக்கொண்டனர்

இதில் அந்த வழியாக வந்த பாரிமுனையிலிருந்து கோயம்பேடு செல்லும் 15 B  பேருந்து கல் வீசி தாக்கப்பட்டது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சிதறியது , இதனால் பயணிகள் அலறி அடித்து ஓடினர். 

தகவல் அறிந்து வந்த கீழ்பாக்கம் போலீசார் 22 மாணவர்களை பிடித்தனர். இதில் விஜய் என்கிற நந்தனம் கல்லூரி மாணவர் மட்டும் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது .அவனை மட்டும் கைது செய்த போலீசார் மற்றவர்களை விடுவித்தனர்.

மேலும் தாக்குதலில் ஈடுபட்ட மற்ற மாணவர்களை தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ராமதாஸ், சீமான் போன்று விவசாயத்துக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கும் விஜய்..! நல்ல விஷயம் என மகிழும் கொங்கு மக்கள்
திமுக ஒரு தீய சக்தி..! வெறிகொண்டு கத்திய விஜய்..! எம்ஜிஆர் ஜெயலலிதா சொன்னது ரொம்ப சரி!