
சாத்தூரில் கடந்த வாரம் அரசு பஸ்சில் பயணம் செய்த வாலிபர், சுட்டு கொல்லப்பட்டார். இதுதொடர்பாக 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
கடந்த வாரம் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஓடிக்கொண்டிருந்த அரசு பஸ்சில், கருப்பசாமி என்ற வாலிபர், சுட்டு கொல்லப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதற்கிடையில் கோவில்பட்டியை சேர்ந்த முகமது ரபீக் என்பவர், மதுரை கோர்ட்டில் சரணடைந்தார். அவரை, போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். இதை தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின்படி லதா, பானு, பாக்கியராஜ், மகாலட்சுமி, வாசு ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.