
மேற்கு வங்க மாநிலத்தை சோந்தவர் ரூபா கங்கூலி. நடிகை, பாடகி என பெயர் பெற்ற இவர், கடந்த 1988ம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரில் திரவுபதியாக நடித்துள்ளார்.
மேலும், பல்வேறு சீரியல்களில் நடித்து விருதுகள் பெற்ற ரூபா கங்கூலி, அரசியல் நாட்டமும் கொண்டார். மேற்கு வங்க பாஜகவின் மகிளா மோர்ச்சா அணியில் பொது செயலாளர், துணை தலைவர் பதவிகளையும் வகித்துள்ளார்.
இதையொட்டி கடந்த 2015ம் ஆண்டு, பாஜக சார்பில் ராஜ்யசபா எம்பியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக அரசியல் கட்சியில் நாட்டம் கொண்ட ரூபா கங்கூலி, பல்வேறு போராட்டங்கள் நடத்தி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழகத்துக்கு ரூபா கங்கூலி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையொட்டி அவர் நேற்ற திருப்பூர் மாவட்டம் மோகனூர் சென்றார். அங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலில் பூஜை நடந்தது. இதில், கலந்து கொண்ட அவர், அருள் வந்ததுபோல் திடீரென ஆடினார்.
பெண் எம்பி ஒருவர், தன் மீது அருள் வந்ததுபோல் ஆடியதும், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்ததும், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர். சிறிது நேரம் சாமி வந்ததுபோல் ஆடிய அவர், பின்னர் சாவகாசமாக மாறினார்.
இதையடுத்து, ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், ஆராதனை நடந்தது. அதில், கலந்து கொண்டு, தரிசனம் செய்தார். இதை தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகளுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.