பாதாள சாக்கடை கழிவுகளை இனி மனிதர்கள் அகற்றத் தேவையில்லை !! கேரள மாணவர்கள் அசத்தல் !!

By Selvanayagam PFirst Published Jul 13, 2019, 11:04 PM IST
Highlights

பாதாள சாக்கடைக் கழிவுகளை அகற்றுவதற்கு புதிய மேம்படுத்தப்பட்ட ரோபோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை கேரள மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
 

பாதாள சாக்கடைக் கழிவுகளை சுத்தப்படுத்தும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்துவத்தை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் மற்றும் கழிவுகளை சுத்தம் செய்வதற்காக ரோபோ ஒன்றை கேரளாவை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடுத்துள்ளனர். 

அதனை ரூ.13 லட்சம் மதிப்பில் மேம்படுத்தி புதிய ரோபோ தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன்முலமாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் காந்திநகர் சாலையில் உள்ள பாதாள சாக்கடை சுத்தப்படுத்தும் சோதனை நடத்தப்பட்டது. 
இதனை தேசிய துப்புரவு பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் பார்வையிட்டார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நகராட்சி,மாநகராட்சி கோரினால் இந்த திட்டத்திற்கு நிதி வழங்க தயாராக உள்ளதாக அவர் கூறினார். 

அதேபோன்று இந்த இயந்திரங்கள் சென்னை, ஹைதராபாத், கர்நாடகா ஆகிய இடங்களுக்கு பரிசோதனை அடிப்படையில் தலா 2 இயந்திரங்கள் அனுபுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சோதனை வெற்றி அடைந்தால் இயந்திரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அவர் கூறினார். 

click me!