தமிழகத்தில் விரைவில் உயரும் மின் கட்டணம்.. பொதுமக்கள் அதிர்ச்சி - எவ்வளவு தெரியுமா ?

By Raghupati R  |  First Published Aug 22, 2022, 8:40 PM IST

தமிழக மின் வாரியத்தின் சார்பில் விநியோகிக்கப்படும் மின்சாரத்துக்கான கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டுள்ளது.


ஆளுங்கட்சியான திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக மாதந்தோறும் மின் கணக்கீடு, வீடுகள் தோறும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குதல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்திருந்தது. இது குறித்து முயற்சிகள் நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

தமிழக மின் வாரியத்தின் சார்பில் விநியோகிக்கப்படும் மின்சாரத்துக்கான கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டுள்ளது. 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக செலுத்தும் வகையில் கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாதம் 300 முதல் 400 யூனிட் பயன்படுத்துவோருக்கு ரூ.147.50 அதிகரிக்க பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..இரண்டு பேருடன் கள்ளக்காதல்.. கணவனை கழட்டிவிட்ட மனைவி - விஷயம் தெரிந்த மாமனார் செய்த சம்பவம் !

இதற்காக அனுமதி கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் மனு சமர்ப்பித்துள்ளது. இதையடுத்து, மின் கட்டண உயர்வு தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்க மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது. கடந்த 16-ம் தேதி கோவையிலும், 18-ம் தேதி மதுரையிலும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. புதிய ஒருமுனை மின் இணைப்புபெறுவதற்கான கட்டணம் 2018-ல் ரூ.1,600-ஆக இருந்தது, 2019 அக்டோபரில் ரூ.6,400 ஆக அதிகரிக்கப்பட்டது.  இந்நிலையில், புதிய முன்மொழிவில் 9,620-ஆக கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது 2018-ம் ஆண்டை ஒப்பிடும்போது 501 சதவீதம் அதிகம் ஆகும். புதிய முன்மொழிவின்படி இரு மாதங்களுக்கு சேர்த்து வீடுகளில் 401 முதல் 500 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோர்தான் அதிகம் பாதிக்கப்பட உள்ளனர். தற்போது 500 யூனிட் பயன்படுத்தினால் ஒருவர் ரூ.1,130 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டண உயர்வுக்கு பின் அவர் ரூ.1,725 செலுத்த வேண்டும். இது, 52.65 சதவீதம் அதிகம் ஆகும். மின் கட்டண உயர்வு என்ற செய்தியானது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

மேலும் செய்திகளுக்கு..தேதி குறித்த ஸ்டாலின்.. திடீர் ஸ்கெட்ச் போட்ட எடப்பாடி.! கொங்கு மண்டலத்தில் திமுக Vs அதிமுக மோதல்

click me!