தமிழகப் பொருளாதாரத்தை சீரழிக்கும் பிடிஆர் தியாகராஜனின் ஈகோ, ஜாலப் பேச்சு: பாஜக தலைவர் அண்ணாமலை விளாசல்

By Pothy RajFirst Published Aug 22, 2022, 5:20 PM IST
Highlights

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஈகோவும், வீண் ஜம்பப் பேச்சும் சேர்ந்துதான் த்தின் மாநிலப் பொருளதாரத்தைஅழித்து வருகிறது. மத்திய அரசோடு தமிழகத்தை ஒப்பிடும் பிடிஆர் தியாகராஜன், தமிழகத்துக்கு இணையாக நிதி வசதி கொண்ட பிற மாநிலத்தோடு ஏன் ஒப்பிடுவதில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்

இந்தியா டுடே இணையதளத்தில் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை “ஒபினியன்” பகுதியில் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையிலான அரசு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் பெரும்பலானவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், மாநிலத்தின் பொருளாதாரமோ ஏற்கெனவே ஆட்டம் கண்டுவிட்டது. 

ஜாலப்பேச்சுக்கும், செயலற்ற தன்மைக்கும் பெயரெடுத்த நிதி அமைச்சர் பிடிஆர் தியாகராஜன், தனது ஈகோவுக்கும், குடும்பபாரம்பரியத்துக்கும் மட்டுமே மதிப்பு அளிக்கிறார். ஆனால், மாநிலப் பொருளாதார விவகாரம் மோசமடைந்தால் அதற்கு பிடிஆர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருவரும்தான் பொறுப்பு. 

கடன் வாங்குறது காஸ்ட்லி! இஎம்ஐ உயரும்! எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் வட்டியை உயர்த்தியது

பிடிஆர் தியாகராஜன் தமிழகத்தின் பொருளதாரத்தை மத்திய அரசோடு ஒப்பிடுவதைவிடுத்து, நிதிஅளவில் சமமாக இருக்கும் மாநிலத்தோடு தமிழகத்தை ஒப்பிட வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின் பொருளாதாரம் எவ்வளவு மோசமாக இருப்பது புரிந்துகொள்வார்

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபின் மாநில நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஏறக்குறைய ஒரு மாதம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, தமிழகதத்துக்கு இருக்கும் நிதிச்சுமை,கடன் ஆகியவை பற்றியே சேனல்களுக்குப் பேட்டியளித்தார்.

ஆட்சிக்கு வந்து 15 மாதங்களாகிவிட்டது, திரும்பிப் பார்த்தால் அவரிடம், வெறும் ஜம்பப்பேச்சு மட்டும்தான் இருக்கிறது. நிதிஅமைச்சரின் ஈகோ போக்குதான் மாநிலப் பொருளாதாரத்தை பலவீனமடைச் செய்து மோசமாக்கியது. 

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூறுகையில் “ நகராட்சிஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு அரசிடம் நிதிஇல்லை” என சமீபத்தில் தெரிவித்தார். விரைவில் பாருங்கள், இதுபோன்று பல்வேறு துறைகளும் தங்களிடம் ஊதியம் கொடுக்ககூட பணம் இல்லை என்று சொல்லிக்கொண்டு வருவாரக்ள்.  முதல்வர், நிதிஅமைச்சரின் திறமையின்மை தமிழக மக்களிடம் அம்பலமாகும்.

தமிழகத்தின் சிறந்த நலனுக்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசு எப்போதுமே செயல்படுகிறது. கடந்த (2006-14) 8 ஆண்டுகளில் மத்திய அரசின் வரிப் பகிர்வில் தமிழகத்தின் பங்கு 139 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நிதி, மானியங்களும் 269 சதவீதம் உயர்ந்துள்ளன.

இலவசங்கள் தரும் கட்சியோடு பாஜக கூட்டணி இல்லையா..? அண்ணாமலையின் அதிரடி பதில்

கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசின் வரி மற்றும் உதவியாக ரூ.3 லட்சத்து 97ஆயிரத்து 325 கோடி பெற்றுள்ளது. இது தவிர, மத்திய அரசும் தமிழகத்தில் சாலை மேம்பாடு, துறைமுக வளர்ச்சி, கட்டமைப்பு, சரக்குப் போக்குவரத்து சாலை வசதி்க்காக ஏராளமாகச் செலவிட்டுள்ளது. தமிழகத்துக்கு பாரத்மாலா மற்றும் சாகர்மாலா திட்டத்துக்காக ரூ. 2 லட்சத்து 5ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜிடிபி முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 2021-22ம் ஆண்டில் 18 சதவீதம் வளர்ந்துள்ளது, குஜராத் 17.4 சதவீதம் வளர்ந்து தமிழகத்தை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

2021-22ம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிக்கும் 5 மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், சொந்த வரி மற்றும் வரி அல்லாத வருவாயில் தமிழகம்தான் மிகக் குறைந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தமிழகம் 14.7 சதவீதம் வளர்ச்சி, கர்நாடகா 14.8 சதவீதம், உ.பி. 27.6 சதவீதம், மகாராஷ்டிரா 35.7 சதவீதம், குஜராத் 38.4 சதவீதமாகும்.

3வது தலைமுறையாக அரசியலில் இருக்கும், நிதிஅமைச்சர் இல்லாமலேயே தமிழக அரசால் 1.47 சதவீதம் வளரமுடியும் என்பதே மோசமானதாகும். வரிக் கசிவை, கூடுதல் செலவினங்களைக் குறைத்துவிட்டோம் என்று தமிழக மக்கள் அவரிடம் இருந்து ஆறுதல் கதையைக் கேட்கிறார்கள், ஆனால் உண்மை நிலவரம் என்பது அவர் சொல்வதைவிட வெகு தொலைவில் இருக்கிறது.

இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம், காத்திருங்கள்... ஸ்டாலின் அறிவிப்பால் அலறும் சென்னை!!!

15-வது நிதிக்குழு மாநிலங்கள் நிதிப்பற்றாக்குறையை ஒரு சதவீதம் குறைக்கக்கூறியது. 2021-22ம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 4 சதவீதமாகவும, 2022-23ம் ஆண்டில் 3.5 சதவீதமாகவும், 2023-26ம் ஆண்டுக்குள் 3 சதவீதமாகவும் குறைக்க வேண்டும் என்று நிதிக்குழு அறிவுறுத்தியது.

அதன்படி குஜராத் அரசின் ஜிடிபியில் நிதிப்பற்றாக்குறை 1.51%, மகாராஷ்டிரா 2.79%, தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை 3.80% மட்டுமே குறைந்தது.

2021-22ம் ஆண்டு தமிழகத்தின் பட்ஜெட்டில் மூலதனச் செலவு ரூ.42,181 கோடி, திருத்தப்பட்டதில் 10 சதவீதம் குறைந்து, ரூ.37,936 கோடி. மாநில ஜிடிபியில் மூலதனச் செலவு தமிழகத்தில் 1.7 சதவீதமாக இருக்கும் போது, கர்நாடகாவில் 2.3 சதவீதமாக இருக்கிறது

அந்நிய முதலீட்டை தமிழகத்துக்கு கொண்டு வருவேன் என்று நிதிஅமைச்சர் பழனிவேல் ராஜன் வார்த்தை ஜம்பம் அடித்தார். கடந்த 4 ஆண்டுகளாக அரசியல் ஆதாயத்துக்காக முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியது,  ஆனால் தற்போது அவை சரிந்து வருகின்றன. 2021, ஜனவரி முதல் டிசம்பர் இ டையே தமிழகத்தில் 3,023.33 மில்லியன் டாலர் அந்நியமுதலீடு வந்துள்ளது. 

வாக்குறுதி அளித்த அமைச்சர் பொன்முடி...! நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவது ஏன்..? ராமதாஸ் ஆவேசம்

இதை காலகட்டத்தில் மகாரஷ்டிாரவில் 12,226 மில்லியன் டாலர், கர்நாடகாவில் 18,554 மில்லியன் டாலர் அந்நிய முதலீடு வந்துள்ளது.

துறைவாரியாகச் செலவினத்தைப் பார்த்தால், 2022-23 தமிழக பட்ஜெட்டில், வேளாண் செலவு கடந்த நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. சுகாதரத்துக்கான செலவு 12 சதவீதமும், சமூக நலத்திட்டங்களுக்கான செலவு 34 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த செலவு 57 சதவீதத்திலிருந்து 53ஆகக் குறைந்துவிட்டது. முதலீட்டு செலவினம், அத்தியாவசியச் செலவினங்களைக் குறைக்கும்போது, சிறந்த நிதிப்பற்றாக்குறையை அடையலாம். ஆனால் வேலைவாய்ப்பு உருவாக்கம், மேம்பாடும் இல்லை.

வருவாய் வசூலில்,  வட்டிக்காகச் செலவிடும் அளவு, தமிழகம் அதிகபட்சமாக 21 சதவீதம் செலவிடுகிறது. பஞ்சாப் முதலிடத்தில் இருக்கிறது.குஜராத் மாநிலம் 14.2சதவீதமும், கர்நாடக மாநிலம் 14.3 சதவீதமும் செலவிடுகின்றன. கடன் வாங்குவதைக் குறைக்க எந்தவிதமான உறுதியான நடவடிக்கையும் தமிழக அரசிடம் இருந்து நாங்கள் பார்க்கவில்லை.

முதலைக் கண்ணீர் வடிக்கும் தமிழக ஆளுநர்..! அடம் பிடித்து நாடகம் ஆடுகிறார்.. சிபிஎம் பாலகிருஷ்ணன் ஆவேசம்

திருத்தப்பட்ட அறிக்கையின்படி, தமிழக அரசு கடந்த ஆண்டு ரூ.ஒரு லட்சத்து 8ஆயிரத்து 175 கோடி கடன் வாங்கியது. இந்த ஆண்டு ரூ.ஒரு லட்சத்து 20ஆயிரத்து 979 கோடி தமிழக அரசு கடன் வாங்கும் எனத் தெரிகிறது.

இந்த ஆண்டு தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை எனத் தெரிகிறது. பல்வேறு துறைகளில் ஒழுங்கமைக்கப்பட்ட ஊழலின் ஒரு பகுதிதான் இது. தனது குடும்பத்தாருக்கு முறையாகப் பங்குகள் கிடைத்து வருவதால் தமிழக முதல்வர் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுப்பதில்லை. தமிழகத்துக்கான கடன் அதிகரி்த்துக்கொண்டே செல்கிறது எப்படி திருப்புச் செலுத்தப்போகிறது.

உதாரணமாக தமிழக மின்வாரியத்துக்கு ரூ.21,399 கோடி கடன் இருக்கிறது, இதை உடனடியாகச் செலுத்த மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், திமுக சார்பில் ஒளிபரப்பாகும் ஆதரவு சேனல்கள் மக்களிடம் உண்மையை மறைத்து, தவறான கருத்துக்களை பரப்புகிறார்கள், சரியான விஷயத்தை பார்க்க முடியாமல் இருக்கிறார்கள்.

இதில்மோசமான பகுதி என்னவென்றால் சுரங்கத்துறையில் வருமான ஈட்டுபவர்களை தமிழக அரசு கண்டும் காணாமல் இருக்கிறது. 2021-22ம் ஆண்டில் ரூ.1179 கோடி கிடைத்துள்ளது. இது 2019-20ம் ஆண்டைவிட ரூ.125 கோடி குறைவு. ஒட்டுமொத்த மாநில வருவாயில் டாஸ்மாக் ரூ.36ஆயிரம் கோடி பங்களிப்பு செய்கிறது.

மற்ற மாநிலங்களில் அதிக மக்கள் தொகை இருந்தாலும் டாஸ்மாக்கில் கிடைக்கும் வருமானம் அங்கு இல்லை. இதன் மூலம் தமிழக அரசு தனது பல்வேறு துறைகளில் தனது இயலாமையை மறைத்து, சொந்த மக்களைின் ரத்தத்தின் மூலம் தனது கஜானாவை நிரப்புகிறது. 

ரோம் நகர மன்னன் பிடில் வாசித்ததை போல, தமிழகமே சீரழியும் போது ஸ்டாலின் போட்டோ ஷூட் நடத்துகிறார்.! ஜெயக்குமார்

மிக முக்கியமாக ,வெற்றி பெற்றிவிட்டோம் என்று மார் தட்டுவதற்கு முன்பாக, தமிழக அரசு, தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றத் தொடங்க வேண்டும். சிறந்த நிதிப்பற்றாக்குறையுடன், தங்களுக்கு இணையாக இருக்கும் மாநிலங்களின்  நிதியுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்


 

click me!