தனியார் பால் விலை உயர்வு.. விற்பனை அதிகரிக்கும் ஆவின் பால் .. சென்னையில் மட்டும் எவ்வளவு விற்பனை தெரியுமா..?

By Thanalakshmi VFirst Published Aug 22, 2022, 4:09 PM IST
Highlights

தமிழகத்தில் தனியார் பால் விலை உயர்ந்ததன் விளைவாக, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளது. 
 

கடந்த 12 ஆம் தேதி முதல் தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி விறபனை செய்யப்பட்டது. நடப்பாண்டு 3வது முறையாக தனியார் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் மூலம் 1.25 கோடி லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால்ஆவின் மூலம் தினமும் 16.41 லட்சம் லிட்டர் பால் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. 

அதாவது பால் விற்பனையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு 84 % ஆக உள்ளது. மீதமுள்ள 16% மட்டுமே அரசு நிறுவனமான ஆவினின் விற்பனையாக உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அவ்வப்போது தனியார் நிறுவனங்கள் தனிச்சையாக பால் விற்பனை விலையை உயர்ந்து வருகிறது. அதன்படி, இந்தாண்டில் மட்டும் 3வது முறையாக தனியார் பால் லிட்டருக்கு ரூ.4 விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:ஷாக்கிங் நியூஸ்.. தமிழகத்தில் பால் விலை இன்று முதல் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்வு..!

சீனிவாசா நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், ஹட்சன் நிறுவனம் 4 ரூபாய் உயர்த்தியுள்ளது. இதனால், பால் சார்ந்த உணவு பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. தனியார் பால் விலை உயர்வால், தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனம் மூலம் நாள்தோறும் விற்பனை செய்யும் பாலின் அளவு சுமார் 30 ஆயிரமாக லிட்டராக அதிகரித்துள்ளது.

தனியார் பால் லிட்டருக்கு ரூ.60 க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ஆவின் பால் ரூ.40 முதல் ரூ.51 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் ஆவின் பாலை வாங்க தொடங்கியுள்ளனர். அதே போல் விலை உயர்வால் வீடுகளிலும் தனியார் பாலுக்கு பதிலாக ஆவின் பாலை வாங்கி பயன்ப்படுத்த தொடங்கியுள்ளனர்.

மேலும் படிக்க:அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி சமஸ்கிருதம்.. சர்ச்சையில் சிக்கிய இஸ்ரோ தலைவர் சோம்நாத்

அதனால் ஆகஸ்ட் முதல் வாரத்தில் விற்பனையான ஆவின் பாலின் அளவை விட 50 ஆயிரம் லிட்டர் பால் அதிகமாக விற்பனை ஆவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன. இதில் சென்னையில் மட்டும் 15 ஆயிரம் லிட்டருக்கும் மேல் ஆவின் பால் அதிகமாக விற்பனையாவதாக கூறப்படுகிறது.

click me!