ஊதிய உயர்வு உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் 2-வது நாளாக போராட்டம்...

First Published Feb 9, 2018, 8:57 AM IST
Highlights
Revenues Struggle to emphasize 20-point demands including wage increases ...


திண்டுக்கல்

ஊதிய உயர்வு உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் இரண்டாவது நாளாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.

"வருவாய்த்துறை அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்,

21 மாத நிலுவை தொகை மற்றும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

தாசில்தார்களுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.1000 திரும்ப வழங்க வேண்டும்.

காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

வருவாய்த்துறையில் கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்" உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருவாய்த்துறையினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று முன்தினம் தற்செயல் விடுப்பு எடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்திலும் வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து நேற்றும் அவர்கள் விடுப்பு எடுத்துப் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் 496 பேரில் 330 பேர் 2 நாளும் தற்செயல் விடுப்பு எடுத்து போராடி வருவதால் இரண்டு நாள்களாக அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

click me!