குலை நடுங்க வைக்கும் பழிக்கு பழி கொலைகள்.!நாயுடு முதல் ஆற்காடு சுரேஷ், ஆம்ஸ்ட்ராங் வரை; வெளியான பகீர் பின்னணி

By Ajmal Khan  |  First Published Jul 19, 2024, 9:15 AM IST

1990களில் இருந்து இரண்டு தரப்பு ரவுடிகளுக்குள் ஏற்பட்ட மோதலே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான பின்னனி என கூறப்படுகிறது. நாயுடு முதல் ஆற்காடு சுரேஷ் வரை அடுத்தடுத்து பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்ட சம்பவம் திரைப்படத்தை மிஞ்சும் வகையில் ரத்த சரித்திரமாகவே காட்சியளிக்கிறது.
 


பழிக்கு பழி- சென்னையை கலக்கிய ரவுடிகள்

நாட்டையே அதிர்ச்சி அடைய செய்த சம்பவம் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையாகும், இந்த கொலையின் காரணமாக திரைமறைவில் பதுங்கி இருந்த பல ரவுடிக்கள், தாதாக்கள் பெயர்கள் வெளியே வர தொடங்கியுள்ளது. அந்த வகையில் 

Tap to resize

Latest Videos

undefined

நாயிடு - ஆம்ஸ்ட்ராங் - தென்னரசு - பாம் சரவணன்- சின்ன கேசவலு

ஆற்காடு சுரேஷ் - அஞ்சலை - புன்னை பாலு
 
தோட்டம் சேகர் -  வீரமணி - மலர்கொடி - ஹரிஹரன் - அருள்

என பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது. அந்த வகையில் 1990ஆம் ஆண்டுகளில் வடசென்னையை கலக்கிய ரவுடி நாயுடு, இவரின்  ஆதரவாளர்களாக செயல்பட்டவர்கள் தென்னரசு, பாம் சரவணன், சின்ன கேசவலு, ஆம்ஸ்ட்ராங் போன்றார். அப்போது தான் புளியந்தோப்பு பகுதியில் வசித்து வந்த ஆற்காடு சுரேஷ் -நாயுடுவின் இடத்தை பிடிக்க திட்டம் போட்டான். அதன் காரணமாகவே தனது கூட்டாளிகளின் உதவியோடு நாயுடுவை போட்டுத்தள்ளுகிறார்.  

Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. அஞ்சலைக்கு எதிராக ஆக்ஷனில் இறங்கிய பாஜக.!

பழிக்கு பழி கொலைகள்

இதன் காரணமாக இரண்டு தரப்பிற்கும் தொடர்ந்த பகை தான் இன்னும் நீள்கிறது. அடுத்ததாக நாயுடு அணியில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பராக சின்ன கேசலுவை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆற்காடு சுரேஷ் கொலை செய்கிறார். அடுத்ததாக பிரபல ரவுடி பாம் சரவணின் தம்பியும் பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளருமான  தென்னரசுவை, அவரது குடும்பத்தினர் கண்முன்னே கேங் வாரில் ஆற்காடு சுரேஷ் தரப்பு கொலை செய்து தனது பலத்தை நிரூபித்த மற்ற ரவுடிகளை அதிர்ச்சி அடைய செய்கிறார்

இதனால் ஆற்காடு சுரேஷ் மீது கடும் கோபம் அடைந்த தென்னரசு கூட்டாளிகள் பழிக்கு பழி தீர்க்க ஆற்காடு சுரேஷ் கடந்த ஆண்டு பட்டினம்பாக்கம் சர்வீஸ் சாலையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.  இதனால் இரண்டு தரப்பிற்கும் மீண்டும் மோதல் தொடங்குகிறது. அடுத்ததாக ஆற்காடு சுரேஷின் கூட்டாளியான ரவுடி மாது (எ) பாக்ஸர் மாதவன் என்பவரையும் கொலை செய்கிறது.  இதற்கிடையே  ஆற்காடு சுரேஷ் கொலை பாம் சரவணனின் ஏற்பாட்டில் நடந்ததாகவும், கொலை நடந்த நேரத்தில் பாம் சரவணனுடன் ஆம்ஸ்ட்ராங் கூட இருந்ததாகவும் எதிர் தரப்பான ஆற்காடு சுரேஷ் தரப்பினர் உறுதி செய்துள்ளனர். 

ஆம்ஸ்ட்ராங் கொலை- எதிரிக்கு எதிரி நண்பன்

இதனையடுத்து தான் ஆற்காடு சுரேஷ் குழு ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல பல வகையில் திட்டங்களை தீட்ட ஆரம்பித்தனர்.  கூலிப்படைகளுக்கு கொடுக்க கோடிக்கணக்கில் பணம் வசூலித்துள்ளனர்.இதில்  அதிமுக நிர்வாகி  மலர்கொடி கணவர் தோட்டம் சேகரை வீரமணி கொலை செய்திருப்பதால் மலர்கொடிக்கு வீரமணிக்கு ஆதரவாக இருக்கும் பாம் சரவணன் கும்பல் மீது  கோவம் இருந்திருக்கிறது.

இதில் தான் மலர்கொடி ஆம்ஸ்ட்ராங் கொலையில் இணைகிறார்.  இந்த கொலையில் எதிரிக்கு எதிரி நண்பன், பழிவாங்கல், ஆருத்ரா பண மோசடி, ரவுடி கேங் வார் என்று பல முனை தாக்குதலில் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டிருக்கிறார். இது போன்று பல வித திடுக்கிடும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி அதிர்ச்சி அடையசெய்து வருகிறது. 

Admk Malarkodi : யார் இந்த மலர்கொடி.! ஆம்ஸ்ட்ராங் கொலையில் அதிமுக நிர்வாகிக்கு தொடர்பு ஏற்பட்டது எப்படி.?
 

click me!