என் கணவர் அருள் வழக்கறிஞர் தொழில் செய்து வந்தார். அவரை சென்னை பெரம்பூரில் நடந்த பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், போலீசார் கைது செய்து பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் அருளையும் என்கவுண்டர் செய்துவிடுவார்கள் என்பதால் அவரது உயிருக்கு பாதுகாப்பு வழங்குமாறு அவருடைய மனைவி ஆவடி காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் அவரது வீட்டின் முன் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியான ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், குன்றத்தூர் திருவேங்கடம் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 11 பேரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க: பாஜகவை சேர்ந்த அஞ்சலை யார்? இவர் யாருடைய மனைவி தெரியுமா? இவருக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பா?
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் ஆயுதங்களை ரெட்டேரி அருகே பதுக்கி வைத்திருப்பதாக கூறியதை அடுத்து அவரை அழைத்து சென்ற போது போலீசாரை ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்ப முயற்சித்த போது என்கவுண்டர் செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை திமுக, அதிமுக, பாஜக பிரமுகர் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக பிரமுகரும், வழக்கறிஞருமான அருளை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணவர் அருள் தவறு செய்திருக்கிறார். அதற்குரிய தண்டனையை அவருக்கு வழங்க வேண்டும். அவரை போலீஸ் கஸ்டடியில் எடுக்கக்கூடாது என ஆவடி காவல் ஆணையரிடம் அவரது மனைவி மனு அளித்துள்ளார்.
இதையும் படிங்க: குலை நடுங்க வைக்கும் பழிக்கு பழி கொலைகள்.!நாயுடு முதல் ஆற்காடு சுரேஷ்,ஆம்ஸ்ட்ராங் வரை... வெளியான பகீர் பின்னணி
இதுகுறித்து வழக்கறிஞர் அருளின் மனைவி அபிராமி தனது மனுவில்: என் கணவர் அருள் வழக்கறிஞர் தொழில் செய்து வந்தார். அவரை சென்னை பெரம்பூரில் நடந்த பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், போலீசார் கைது செய்து பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்துள்ளனர். அவருடன் சேர்ந்து கைதான நபர்களை ஐந்து நாள் காவலில் வைத்து விசாரித்தனர். அப்போது திருவேங்கடம் என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர்.
அதேபோல் எனது கணவர் அருளையும் போலீசார் என்கவுன்ட்டர் செய்துவிடுவார்கள். அருள் செய்தது தவறுதான். அதற்குரிய தண்டனையை அவருக்கு தர வேண்டும். அருளை போலீஸ் கஸ்டடியில் எடுக்கக் கூடாது. அவரது உயிருக்கு ஆபத்து ஏதும் நேரவே கூடாது. அவருக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.