செய்தியாளர்கள் மீது கல்வீசும் ரவுடிகள் - கூவத்தூரில் அராஜகம்

Asianet News Tamil  
Published : Feb 11, 2017, 09:52 AM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
செய்தியாளர்கள் மீது கல்வீசும் ரவுடிகள் - கூவத்தூரில் அராஜகம்

சுருக்கம்

கடந்த 5ம் தேதி முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர், அதிமுக பொது செயலாளர் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இதற்கிடையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதையடுத்து அனைத்து எம்எல்ஏக்களையும் சொகுசு பஸ்களில் ஏற்றி கொண்டு சென்றனர்.

அவர்களை காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோல்டன் பே எனப்படும் தனியார் விடுதியில் அடைக்கப்பட்டதாக பேசப்படுகிறது.

இந்நிலையில், எம்எல்ஏக்கள் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கோல்டன் பே விடுதிக்கு வருவாய் துறை அதிகாரிகளும், போலீசாரும் சென்றனர். இதை அறிந்ததும், செய்தி சேகரிக்க தனியார் டிவி சேனல் நிருபர்களும், பத்திரிகையாளர்களும் சென்றனர். அப்போது, அந்த விடுதியின் அருகில் இருந்த அதிமுகவினர் சிலர், கற்கள் மற்றும் கட்டைகள் சரமாரியாக தாக்கி விரட்டியடித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 26 January 2026: தேசிய கொடியை ஏற்றி முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட ஆளுநர்
கரூர் 41 பேர் மரணத்திற்கு நீங்களும் காரணம் தானே பனையூர் பண்ணையாரே..! விஜய் மீது இடியை இறக்கிய அதிமுக..