பத்திரப் பதிவுத்துறையில் பிப்ரவரி மாதத்தில் மட்டும் எத்தனை கோடி வருவாய் தெரியுமா? அமைச்சர் மூர்த்தி தகவல்!

By vinoth kumarFirst Published Mar 2, 2024, 7:11 AM IST
Highlights

சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் 2024-ஆம் ஆண்டு  பிப்ரவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

பத்திரப்பதிவுத்துறையில் பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரூ.1,812.70 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட ரூ.218 கோடி அதிகமாகும். 

சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் 2024-ஆம் ஆண்டு  பிப்ரவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநிலத்தின் வரிவருவாயில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் பங்களிக்கும் முக்கிய துறையாக விளங்கும் வணிக வரித்துறை 2023–24ஆம் நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை ரூ. 1,16,824 கோடி மொத்த வரி வருவாய் ஈட்டியுள்ளது. 2023–24 ஆம் நிதியாண்டில் பிப்ரவரி மாதம் மட்டும் வணிகவரித்துறையில் வரி வருவாய் பத்தாயிரம் கோடியைத் தாண்டி ரூ.11,383 கோடி மொத்த வரி வருவாய் ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரூ.10,000 டெபாசிட் செய்தால் போதும்.. ரூ.7 லட்சத்திற்கு மேல் பெறலாம்.. முழு விபரம் உள்ளே..

கூட்டத்தின்போது, தமிழ்நாடு வணிகர் நல வாரியம் சார்பில் திருவாரூரைச் சேர்ந்த திருமதி சாந்தி தேவி மற்றும் குளித்தலையைச் சேர்ந்த சிவக்குமார் ஆகியோருக்கு குடும்ப நல நிதி உதவியாக தலா ரூபாய் மூன்று லட்சம் (ரூ. 3,00,000/-) காசோலையை அமைச்சர் வழங்கினார்கள்.

அனைத்து கோட்டங்களில் பணிபுரியும் இணை ஆணையர்களும்(மா.வ) கூடுதல் கவனம் செலுத்தி தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை செவ்வனே மேற்கொண்டு அரசின் வருவாய் இலக்கை அடைவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்கள். இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசுச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதையும் படிங்க:  நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டி? இந்த 5 தொகுதிகளில் ஏதாவது ஒன்றில்!

பத்திரப்பதிவுத்துறையில் பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரூ.1,812.70 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.1,593.95 கோடி வருவாய் ஈட்டப்பட்ட நிலையில் இந்தாண்டு ரூ.218 கோடி அதிகமாகும். 

click me!