#Breaking | Tamilnadu Rain | 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்… 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!!

By Narendran SFirst Published Nov 25, 2021, 6:22 PM IST
Highlights

#TamilnaduRain | தூத்துக்குடி மாவட்டத்தை தொடர்ந்து நெல்லை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தை தொடர்ந்து நெல்லை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் இதனால், இன்று முதல்  அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் காற்று உந்துதல் குறைவாக இருந்ததால் அழுத்தம் ஏற்படாமல் வங்கக்கடலில் தாழ்வுப் பகுதி உருவாகவில்லை என கூறப்படுகிறது. மேலும் காற்று சுழற்சி காரணமாக, தற்போது கனமழை பெய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், இன்று காலை 08:30 மணி முதல் தற்போது வரை தூத்துக்குடியில் 25 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் நாளை தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை தற்போது சிவப்பு அலர்ட் எச்சரிக்கையாக மாற்றப்பட்டது. அதை தொடர்ந்த் தற்போது நெல்லை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை எச்சரிக்கையை அடுத்து புதுகோட்டை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

click me!