
சென்னை மாநகர பொது போக்குவரத்து பேருந்துகளில், பயணம் செய்யும் மக்கள் சத்தமாக போன் பேசுவதை தடை விதிக்க தமிழக அரசுக்கு மாநகர போக்குவரத்து கழகம் பரிந்துரை செய்துள்ளது.பேருந்துகளில் உடன் பயணிக்கும் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சத்தமாக போன் பேசுவது, பாடல் கேட்பது , கேம் விளையாடுவது போன்றவற்றிற்கு தடை விதிக்க வேண்டும் என்று திருப்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் பொன்னுசாமி என்பவர் மனு அளித்திருந்தார்.இதனை தொடர்ந்து மாநகர பேருந்துகளில் பயணிக்கும் போது சத்தமாக போன் பேசுவது, பாடல் கேட்பது, கேம் விளையாடுவது போன்றவற்றிற்கு தடை விதிக்கக் கோரி மாநகர போக்குவரத்துக் கழகம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
அதேபோன்று,தமிழகத்தில் உள்ள பேருந்துகளில் இந்தாண்டு இறுதிக்குள் ” இ - டிக்கெட்” அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், பேருந்துகளில் இந்தாண்டு இறுதிக்குள் வழக்கமான பயணச்சீட்டிற்கு பதிலாக “ இ- டிக்கெட் அறிமுகப்படுத்தப்படும். இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தவுடன் ஜி- பே, மொபை ஸ்கேனிங் மூலமாக பேருந்துகளில் டிக்கேட் பெறும் வசதி கொண்டுவரப்படும் என்று கூறினார். இதன் மூலம் பயணிகள் நேரடி பண பரிமாற்றத்தை தவிர்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: இனி பேருந்துகளில் டிக்கெட் G pay மூலம் பணம் செலுத்தலாம்.. வருகிறது ”இ - டிக்கெட்”.. அமைச்சர் தகவல்..