தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை.. 13 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்..

Published : Jun 06, 2022, 02:05 PM IST
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை.. 13 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்..

சுருக்கம்

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” ஆந்திரப்பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரண மாக,

06.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி,
சேலம்‌, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை மற்றும்‌ திருவண்ணாமலை மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

07.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

08.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

09.06.2022. 10.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ சில இடங்களில்‌ லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி
செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

06.06.2022: மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ தென்மேற்கு வங்ககடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

ஆந்துர கடலோரப்பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

தென்கிழக்கு அரபிக் கடலோரப் பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

07.06.2022: மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ தென்மேற்கு வங்ககடல்‌ பகுதிகளில்‌ பலத்தக் காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மத்திய கிழக்கு மற்றும்‌ தென் கிழக்கு அரபிக் கடலோரப் பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

08.06.2022. 09.06.2022. 10.06.2022: வடக்கு கேரளா - கர்நாடக கடலோரப் பகுதிகளில்‌ சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.
 
மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

மேலும் படிக்க: இனி பேருந்துகளில் டிக்கெட் G pay மூலம் பணம் செலுத்தலாம்.. வருகிறது ”இ - டிக்கெட்”.. அமைச்சர் தகவல்..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Firecracker Scam Alert: Online பட்டாசு மோசடி! சமத்தா இருந்து தப்பிச்சுக்கோங்க! அலர்ட் செய்த தமிழக அரசு!
Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!