பட்டபகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு...

 
Published : May 30, 2017, 04:53 PM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
பட்டபகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு...

சுருக்கம்

Real estate Chancellor murdred in chennai

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை  ஐஸ் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் ஹனிப். இவரை அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் பட்டபகலில் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். 

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மர்ம நபர்களை சுற்றி வளைக்க முற்பட்டனர். ஆனால் அதற்குள் ஹனிப்பை வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். 

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!