திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம் – இயக்குனர்கள் கூட்டாக பேட்டி...

 
Published : May 30, 2017, 04:28 PM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம் – இயக்குனர்கள் கூட்டாக பேட்டி...

சுருக்கம்

About thriumurgan gandhi case

திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான், கவுதமன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில் ஈழத் தமிழர்கள் பலர் இலங்கை ராணுவத்தால் கொலை செய்யப்பட்டனர்.

குண்டுகளை பயன்படுத்தக் கூடாது என்ற விதியையும் மீறி தமிழர்கள் அதிகம் வசித்த பகுதிகளான யாழ்ப்பானம்,திரிகோணமலை, மன்னார், வன்னி மற்றும் கிளிநொச்சி உள்ளிட்ட இடங்களில் குண்டுகளை வீசியது இலங்கை ராணுவம்.

இந்த இனப்படுகொலையை நினைவு கூறும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படுவது உண்டு.

ஆனால் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்ற பிறகு நினைவேந்தல் நிகழ்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தடையையும் மீறி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த மே 17 இயக்கத்தினர் கடந்த 17 ஆம் தேதி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

அப்போது காவல்துறைக்கும் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ்  திருமுருகன் காந்தி, இளமாறன், டைசன், அனுன்குமார் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

இதற்கு திரைப்பட இயக்குனர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னையில் திரைப்பட இயக்குனர்கள் கூட்டாக பேட்டியளித்தனர்.

இயக்குனர் கவுதமன் பேசுகையில், திருமுருகனுக்கு பிறகு என்னையும் கைது செய்யக்கூடும் எனவும், மத்திய அரசு சொன்னதால் தான் தமிழக அரசு திருமுருகனை கைது செய்துள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசை எதிர்பவர்களை அச்சுறுத்தும் செயல் எனவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என மத்திய அரசு கருதுவதாகவும் தெரிவித்தார்.

அறம் தவறிய அரசை மக்கள் தண்டிப்பார்கள் எனவும் திருமுருகன் உள்ளிட்ட 4பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் கவுதமன் தெரிவித்தார்.

இயக்குனர் பிரம்மா பேசுகையில், நினைவேந்தல் கூட்டம் நடத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வது நியாயமா? எனவும் தமிழர்களை அடிமைகளாக ஆக்குவதற்கான அடையாளம் தான் இது எனவும் தெரிவித்தார்.

இயக்குனர் கமலகண்ணன் பேசுகையில், வரலாறு சார்ந்த நினைவுகளை அளிக்க முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டினார். நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தியவர்கள் வன்முறையில் ஈடுபட வில்லை எனவும் குறிபிட்டார்.  

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!