துணைவேந்தர் நியமன விவகாரம் – மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என விஜயகாந்த் அதிரடி...

 
Published : May 30, 2017, 04:02 PM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
துணைவேந்தர் நியமன விவகாரம் – மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என விஜயகாந்த் அதிரடி...

சுருக்கம்

About Vice-Chancellor Appointment - a big protest will be happen said by vijayakanth

மதுரை காமராஜர் பல்கலை கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட செல்லத்துரைக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த கல்யாணி மதிவாணனின் பதவி காலம் முடிவடைந்து விட்ட நிலையில், தற்போது புதிய துணைவேந்தராக இப்பல்கலை முன்னாள் பேராசிரியர் செல்லத்துரை நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த பல்கலை கழகத்தில் 2 ஆண்டுகளுக்கு மேலாக புதிய துணைவேந்தர் நியமிக்கப்படாமல் இருந்ததது.

இதற்காக முன்னாள் கவர்னர் ரோசய்யா, பேராசிரியர் முருகதாஸ் தலைமையில் தேடல் குழு அமைத்தார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பரிசீலித்து மூன்று பேர் கொண்ட பட்டியலை தற்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தேடல் குழு அளித்தது.

இதில் செல்லத்துரை தேர்வு செய்யப்பட்டு இப்பல்கலை கழகத்தின் 16 வது துணைவேந்தராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இதற்கு குற்றவாளியாக தேடப்படும் ஒருவருக்கு துணைவேந்தர் பதவியா என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், மதுரை காமராஜர் பல்கலை கழகம் முன்பு தேமுதிக சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலை கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட செல்லத்துரையை திரும்ப பெற வேண்டும் எனவும், துணை வேந்தர் பதவிக்கு சிறிதும் தகுதி இல்லாதவர் செல்லத்துரை என்றும் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!