
இறைச்சிக்காக மாடுகளை விற்க கூடாது என மத்திய அரசு விதித்துள்ள புதிய விதிமுறைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் மாடுகளை இறைச்சிக்காக பயன்படுத்த கூடாது என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரள, கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசின் சட்டத்தை நிறைவேற்ற முடியாது என தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.
ஆனால் தமிழக எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் போராட்டங்களையும் அறிவித்துள்ளனர்.
இதனிடையே மத்திய அரசின் இந்த தடை விதிப்புக்கு எதிராக செல்வ கோமதி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் உணவு என்பது அடிப்படை உரிமை எனவும், அதில் அரசு தலையிட அதிகாரம் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு அவசர வழக்காக எடுத்துகொள்ளபட்டு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மத்திய அரசின் புதிய விதிமுறைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும் இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.