அண்ணாமலைக்கு அதிமுக வரலாறு தெரியலை... நாங்கள் அணைய போகிற விளக்கல்ல.. கலங்கரை விளக்கம்- ஆர் பி உதயகுமார்

By Ajmal Khan  |  First Published May 31, 2024, 2:28 PM IST

 இன்றைக்கு பாஜக தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக எல்லோரையும் வசை பாடுகிற அண்ணாமலை, தாய் தமிழ்நாட்டிற்காக நீங்கள் பொறுப்பேற்றதற்கு பிறகு என்ன செய்தீர்கள் என நீங்கள் பட்டியலிட முடியுமா என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். 


வாய் கூசாமல் பேசும் அண்ணாமலை

அதிமுக - பாஜக இடையே  மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக அணையப்போகிற விளக்கு என அண்ணாமலை விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில்,  ஜூன் 4க்கு பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எங்கே இருக்க போகிறது என்று வாய் கூசாமல் இன்றைக்கு ஒருவர் (அண்ணாமலை)பேசிக் கொண்டே இருக்கின்றார்.

Tap to resize

Latest Videos

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பற்றி பேசினால் அவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று தெரியாமல் ஒவ்வொரு நாளும் அதிமுக பற்றி பேசாத நாளே இல்லை என்கிற ஒரு நிலையில் இருக்கிறது.  4ம் தேதிக்கு பிறகு அல்ல இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அதிமுகமக்கள் இயக்கமாக இந்திய திருநாட்டில் அன்னைத் தமிழகத்தில் வெற்றி கொடி நாட்டும் என்பதை அண்ணாமலை அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

வெயில் சுட்டெரிக்குது.!!பள்ளிகள் திறப்பதை இரண்டு வாரத்திற்கு தள்ளி போடுங்க.. அரசுக்கு கோரிக்கை விடுத்த ராமதாஸ்

 அதிமுக அணையா விளக்கு

அதிமுக நிலை என்ன என 4ம்தேதிக்கு பிறகு தெரியும் என்று சொல்லுகிறார்கள். அதிமுகவை பொறுத்தவரை மக்கள் சேவையே கழகத்தினுடைய ஒரே கொள்கையாக வைத்து செயலாற்றி வருகின்றோம். ஆகவே இன்றைக்கு அண்ணாமலை அவர்கள் ஒவ்வொரு நாளும் அதிமுக பற்றி பேசுவது ஏறத்தாழ 2 கோடி தொண்டர்களும் மன வேதனை அடையும் வகையில், அணையப் போகும் விளக்கு பிரகாசமாக தான் எரியும் என்று சொல்லி இருக்கிறார்கள். அணைய போகும் விளக்கு அல்ல அதிமுகவை பொறுத்தவரை அணையா விளக்கு என்பது அன்னை தமிழக மக்களுக்கு தெரியும். தாய்த்தமிழ் நாட்டு மக்களுக்கு வழிகாட்டுகிற கலங்கரை விளக்காகும். அண்ணாமலைக்கு வரலாறு தெரியவில்லை. இன்றைக்கு வரலாறை படித்து பேசுவதை காட்டிலும் குறிப்பெடுத்து பேசுகிற தலைவராக அவர் இருக்கின்றார் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது விளம்பர வெளிச்சத்தில் அரசியல் நடவடிக்கைகளை அவர் உருவாக்குகிறார்.

தமிழ்நாட்டிற்கு செய்தது என்ன.?

அவரிடத்திலே பணிவோடு பண்போடும் அடக்கத்தோடும் கேட்கிறேன் அண்ணாமலை  ஆற்றிய சேவைகள் என்ன? இந்த தாய்த்தமிழ் நாட்டுக்காக அண்ணாமலை அவர்கள் தாய் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆற்றிய சேவைகள் என்ன? மக்கள் தொண்டு என்ன?  இந்த தாய் தமிழ் நாட்டு மக்களின் உரிமைகளை அவர்கள் பெற்று கொடுத்தது என்ன? மொழி உரிமை பெற்றுக் கொடுத்தாரா? இன உரிமை பெற்றுக் கொடுத்தாரா? ஜீவாதார உரிமை பெற்றுக் கொடுத்தாரா? பத்தாண்டு காலம் இன்றைக்கு மத்தியிலே ஆட்சி அதிகாரத்தில் இருந்த பாரதிய ஜனதா கட்சியின் மூலமாக இன்றைக்கு தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக எல்லோரையும் வசை பாடுகிற அண்ணாமலை, தாய் தமிழ்நாட்டிற்காக நீங்கள் பொறுப்பேற்றதற்கு பிறகு என்ன செய்தீர்கள் என நீங்கள் பட்டியலிட்டு சொன்னால் அது மக்களுக்கு எத்தனை பேர்களுக்கு பயன்பெற்று இருக்கிறது என்று சொன்னால் நாங்கள் பொது வாழ்க்கையில் இருந்து விலகிக் கொள்வதற்கு கூட தயங்கவும் மாட்டோம்

ஆன்மா ஒரு போதும் மன்னிக்காது

நீங்கள் எங்களை அழிக்க நினைத்தால் அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போயிருக்கிறார்கள், கருகப்பிள்ளை ,கொத்தமல்லி இலவசமாக கொடுக்கக்கூடிய பொருட்கள் விலை உயர்ந்து இருக்கிறது அதை எல்லாம் சுட்டிக்காட்டி சொல்ல வேண்டிய அண்ணாமலை  அம்மாவின் புகழை சொல்வதாக சொல்லி அதில் ஏதேனும் திசை திருப்புகிற முயற்சியை மேற்கொள்வீர்கள். ஆனால் அம்மாவின் ஆன்மா ஒருபோதும் உங்களை மன்னிக்காது. ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு அதிமுக எங்கே இருக்கிறது என்ற சந்தேகம் உங்களுக்கு வேண்டாம். அது தமிழகத்தில் தான் இருக்கும் இந்திய மக்களுக்காக தமிழக மக்களுக்காக சேவை ஆற்றிக் கொண்டுதான் இருக்கும் அம்மாவின் புகழை சொல்வதற்கு எட்டு கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் என ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். 

இனியும் அலட்சியம் வேண்டாம்! தமிழக இளைஞர்களை ஆன்லைன் அரக்கனிடம் இருந்து காப்பாத்துங்கள்.. டிடிவி.தினகரன்!

click me!