Heat Stroke: ஷாக்கிங் நியூஸ்! வெயிலின் தாக்கத்தால் சென்னையில் 12ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு.!

Published : May 31, 2024, 02:02 PM ISTUpdated : May 31, 2024, 02:04 PM IST
Heat Stroke: ஷாக்கிங் நியூஸ்! வெயிலின் தாக்கத்தால் சென்னையில் 12ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு.!

சுருக்கம்

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை வெளுத்து வாங்கிய நிலையில் தற்போது மீண்டும் தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். 

சென்னையில் கடும் வெயிலின் தாக்கத்தால் 12ம் வகுப்பு மாணவன் சக்தி சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை வெளுத்து வாங்கிய நிலையில் தற்போது மீண்டும் தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். இந்நிலையில், சென்னையில் கடும் வெயிலின் தாக்கத்தால் 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்! கேலி செய்த இளைஞர்! கொதிக்கும் பாலை மேலே ஊற்றிய இளம்பெண்!

சென்னை திருநின்றவூர் தாசர் மேல்நிலைப்பள்ளியில் தற்போது 12ம் வகுப்பு படித்து முடித்த ஹரிசுதன் என்ற மாணவன் இதய நோய் பாதிப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் இறந்த ஹரிசுதன் உடலை பார்க்க தன்னுடன் படித்த சக மாணவர்கள் சென்றுள்ளனர். அப்போது கடும் வெயிலினை தாக்கு பிடிக்க முடியாமல் சக்தி என்ற மாணவன் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதையும் படிங்க:  10 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தையை கொடுத்துட்டு என் புருஷன் உயிரை எடுத்துட்டியே கடவுளே! கதறும் மனைவி!

சிறுவனுக்கு பிறவியிலேயே வியர்வை சுரக்கும் சுரப்பிகள் வேலை செய்யாமல் இருப்பதாலும், மற்ற இணை பாதிப்புகள் இருந்ததாலும் உயிரிழந்துள்ளதாக அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். நண்பனின் உடலை பார்க்க சென்றபோது சுருண்டு விழுந்து  மாணவன் சக்தி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!