சென்னையில் அதிர்ச்சி சம்பவம்! கேலி செய்த இளைஞர்! கொதிக்கும் பாலை மேலே ஊற்றிய இளம்பெண்!

Published : May 31, 2024, 11:54 AM ISTUpdated : May 31, 2024, 11:59 AM IST
சென்னையில் அதிர்ச்சி சம்பவம்! கேலி செய்த இளைஞர்! கொதிக்கும் பாலை மேலே ஊற்றிய இளம்பெண்!

சுருக்கம்

சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங் குப்பத்தை சேர்ந்தவர் பிரேம்குமார். பிரபல நட்சத்திர விடுதியில் நீச்சல் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இவர் இளம்பெண் நடத்தி வரும் டீக்கடை ஒன்றில் தினமும் தேநீர் குடிப்பதை வழக்கமாக  கொண்டுள்ளார். 

சென்னையில் கிண்டல் செய்த நீச்சல் பயிற்சியாளர் மீது இளம்பெண் கொதிக்கும் பாலை ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங் குப்பத்தை சேர்ந்தவர் பிரேம்குமார். பிரபல நட்சத்திர விடுதியில் நீச்சல் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இவர் இளம்பெண் நடத்தி வரும் டீக்கடை ஒன்றில் தினமும் தேநீர் குடிப்பதை வழக்கமாக  கொண்டுள்ளார். 

இதையும் படிங்க: 10 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தையை கொடுத்துட்டு என் புருஷன் உயிரை எடுத்துட்டியே கடவுளே! கதறும் மனைவி!

சம்பவத்தன்று இரவு தேநீர் அருந்த கடைக்கு சென்ற பிரேம்குமார், அப்பெண்ணை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த இளம்பெண் யோசிக்காமல் கொள்ளாமல் கொதிக்கும் பாலை பிரேம்குமார் மீது ஊற்றியுள்ளார். 

இதில் வாலிபரின் வயிறு உள்ளிட்ட பகுதிகள் வெந்துபோய் வலியால் அலறி துடித்துள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக அண்ணா சதுக்கம் போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது உறவுக்கார பெண் என்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க:  Summer Leave Extension: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. கோடை விடுமுறை நீட்டிப்பு! வெளியான அறிவிப்பு!

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!