ராவணன் திராவிடன் அல்ல ஆரியன்; கருணாநிதி சொன்னது தவறு!

By thenmozhi gFirst Published Sep 24, 2018, 6:59 PM IST
Highlights

சு.சுவாமி

ராமாயணத்தில் வில்லனாக சித்திரிக்கப்படும் ராவணன், தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறி வந்ததுபோல் திராவிடன் 
அல்ல என்றும் ராவணன் ஆரியன் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

ராமாயணத்தில் வில்லனாக சித்திரிக்கப்படும் ராவணன், தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறி வந்ததுபோல் திராவிடன் 
அல்ல என்றும் ராவணன் ஆரியன் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கோவாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இந்திய பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் அதன் 
முக்கியத்துவம் என்னும் தலைப்பில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ராமாயணத்தில் வில்லனாக சித்திரிக்கப்படும் ராவணன், இலங்கையில் பிறந்தவர் என்ற பிரதான கருத்தை 
மறுத்தார். உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் பிஷ்ரக் கிராமத்தில் பிறந்தவர் என்றும் கூறினார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறி வந்ததுபோல், ராவணன் ஒரு திராவிடன் அல்ல என்றும் ராவணன் ஆரியன் 
என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறினார். 

ராமன், வட இந்தியாவில் பிறந்தாலும், ராவணனைக் கொன்றதாலும், தென் இந்தியர்களுக்கு அவர் வெறுக்கத்தக்கவர் ஆகிவிட்டார். ராவணன் இலங்கையில் இருந்ததால், அவர் திராவிடன் எனக் கருதப்படுவது உண்மை அல்ல என்றும் சாம வேதம் அறிந்த அறிஞர் ராவணன் என்றும், ராவணனைத் தன்னைப்போல் என கருணாநிதி தவறாக கருதிவிட்டதாகவும் கூறினார்.

மேலும் பேசிய அவர், வட இந்தியா ஆரியர்களுக்கானது என்றும், தென் இந்தியர்கள் திராவிடர் என்றும் ஆங்கிலேயர் நம் மனதில் 
புகுத்தியது தவறான கருத்து என்றார். எனவே நாம் அனைவரும் ஒருவரே என்பது ஏற்கப்பட வேண்டும் என்றும் ஆங்கிலேயர் தம் 
வரலாற்று நூல்களில் எழுதியதுபோல் நாம் ஒன்றும் தொலைதூரத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல என்றும் சுப்பிரமணியன் சுவாமி 
கூறினார்.

click me!