
தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் அண்ணா பல்கலை கழகம் வெளியிட்டது. www.tnea.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் ரேண்டம் எண்ணை பார்த்து கொள்ளலாம்.
சென்னை அண்ணா பல்லைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் 550 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. 2017– 2018 ஆண்டு கல்வி ஆண்டிற்கான பி.இ.மற்றும் பி.டெக் படிப்புகளில் சேர்வதற்காக ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 451பேர் விண்ணப்பத்து உள்ளனர். மொத்தம் 2 லட்சம் பொறியல் படிப்புக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதனிடையே பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பித்தவர்களின் தரவரிசையை முடிவு செய்வதற்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டது. இதனை உயர்கல்வி முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் வெளியிட்டார்.
ரேண்டம் எண்ணை தெரிந்து கொள்ள மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தின் எண்ணை அண்ணா பல்கலையின் இணையதளத்தில் குறிப்பிட்டு ரேண்டம் எண்ணை அறிந்து கொள்ளலாம்.
இதனைத் தொடர்ந்து வரும் 22 ஆம் தேதி தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.