"இனி செல்போனிலேயே கரன்ட் பில் கட்டலாம்" - அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

Asianet News Tamil  
Published : Jun 20, 2017, 09:05 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
"இனி செல்போனிலேயே கரன்ட் பில் கட்டலாம்" - அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

சுருக்கம்

EB charges will be paid by mobile app

தமிழகத்தில் மொபைல் போன் ஆப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சட்டப் பேரவையில் அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் மின் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.. அப்போது விவசாய மின் இணைப்புக்கு மனு அளித்து காத்திருப்போருக்கு பல்வேறு புதிய கலுகைகள் அறிவிக்கப்பட்டன.

விவசாயிகளுக்கு விரைவில் மின் இணைப்பு பெறுவதற்காக தட்கல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்தார்.

மேலும் ஆப் – கிரிட்  எனப்படும் வழக்கமான மின் கட்டமைப்பில் இணைக்காமல்  சூரிய சக்தி மூலம் பம்ப்புகளை இயக்க முன்வரும் விவசாயிகளுக்கு சலுகைகள் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று மொபைல் போன் ஆப் மூலம்  மின் கட்டணம் செலுத்தும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

நடுத்தெருதான்... பிரேமலதா மீது காண்டாகும் தேமுதிக நிர்வாகிகள்..!
விஜய்-காங்கிரஸ் எம்.பி.க்கள் பிளானுக்கு எண்ட் கார்டு போட்ட கனிமொழி.. ராகுலுடன் முக்கிய ஆலோசனை