
ராம்கோ சிமென்ட் அதிபர் ராமசுப்பிரமணிய ராஜா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
ராம்கோ சிமின்ட், நுாற்பாலைகள் உள்ளிட்ட நிறுவனங்களை நிர்வகித்து வந்தவர் ராம சுப்ரமணிய ராஜா. இவருக்கு வயது 82.
இவருக்கு மனைவி சுதர்சனம், மகன் வெங்கட் சுப்பிரமணிய ராஜா ஆகியோர் உள்ளனர்.
ராம சுப்ரமணிய ராஜா நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் ராஜபாளையம் அருகே உள்ள ஆசிரமத்தில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
ராமசுப்பிரமணிய ராஜா உடல் பொதுமக்கள் பார்வைக்காக ராஜபாளையம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ராம்கோ தொழில் குழும நிர்வாகத்தை வெங்கட் சுப்பிரமணிய ராஜா கவனித்து வருகிறார்.