அரசு சார்பில் மணல் குவாரி திறப்பு - ஒரு யூனிட் மணல் ரூ.525...

 
Published : May 11, 2017, 07:39 PM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
அரசு சார்பில் மணல் குவாரி திறப்பு - ஒரு யூனிட் மணல் ரூ.525...

சுருக்கம்

new sand qurry is open at trichi in government secuirity

திருச்சி மாவட்டத்தில் அரசு சார்பில் திறக்கப்பட்ட மணல் குவாரியில்  ஒரு ‘யூனிட்’ மணல் ரூ. 525 க்கு விற்பனை செய்யப்பட்டது.

திருச்சி, கரூர் மாவட்டங்களில் உள்ள காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் சுமார் 15 மணல் குவாரிகள் இயங்கி வந்தன.

தமிழகத்தின் மணல் தேவைக்கு இந்த குவாரிகளில் இருந்தே மணல் அள்ளி அனுப்பப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த மணல் குவாரிகளும் திடீரென மூடப்பட்டன.

இதனால் கட்டிட தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். எனவே தமிழக அரசு மூடப்பட்ட மணல் குவாரிகளை உடனே திறக்கவேண்டும் என கோரி மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து சமீபத்தில் நடைபெற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூடப்பட்ட மணல் குவாரிகளை அரசே திறந்து நடத்தும் என அறிவித்தார்.

அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள விரகாலூர் திண்ணக்குளம் என்ற இடத்தில் கொள்ளிடம் ஆற்றில் மூடப்பட்டு இருந்த மணல் குவாரி நேற்று திறக்கப்பட்டது.

இங்கு ஒரு யூனிட் மணல் விலை ரூ. 525 க்கு விற்கபடுகிறது. இந்த தொகைக்கான வரைவோலையை குவாரியில் கொடுத்து மணல் எடுத்து செல்லலாம் எனவும், ஒருவார காலத்தில் தொடர்ந்து மற்ற குவாரிகளும் திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் எனவும் பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிகின்றன.

 

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!