Ramanathapuram: ராமநாதபுரத்தில் 5 ஓ.பி.எஸ்.களுக்கும் பின்னடைவு! முன்னிலையில் நவாஸ் கனி!

By SG BalanFirst Published Jun 4, 2024, 12:35 PM IST
Highlights

நண்பகல் 12 மணி நிலவரப்படி, ராமநாதபுரத்தில் ஓ. பன்னீர்செல்வம் 37,731 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அவருடன் களமிறங்கிய மற்ற நான்கு ஓ.பி.எஸ்.களும் குறைவான வாக்குளையே பெற்றுள்ளனர்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2வது இடத்திற்குப் பின்தங்கி இருக்கிறார். அந்தத் தொகுதியில் 5 பேர் ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயரில் போட்டியிடும் நிலையில், ஐந்து பேருக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்று சுயேச்சையாக ராமநாதபுரம் தொகுதியில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இந்நிலையில் நண்பகல் 12 மணி நிலவரப்படி, அவர் 37,731 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

Latest Videos

அவருடன் போட்டியாக களமிறங்கிய மற்ற நான்கு ஓ.பி.எஸ்.களும் குறைவான வாக்குளையே பெற்றுள்ளனர். ஒச்சப்பன் பன்னீர்செல்வம் 416, ஒய்யாதேவர் பன்னீர்செல்வம் 206, ஒய்யாரம் 157, ஒச்சாதேவர் பன்னீர்செல்வம் 79 வாக்குகள் பெற்றுள்ளனர்.

ஆட்சி மாற்றத்துக்கு தயாரான ஒடிசா! தனிப்பெரும் கட்சியாக உருவாகும் பாஜக! பிஜேடிக்கு சறுக்கல்!

திமுக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் ஐயூஎம்எல் கட்சியின் சிட்டிங் எம்.பி.யான நவாஸ் கனி 89,278 
வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் 19,801 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் சந்திரபிரபா 14 631 வாக்குகள் பெற்றுள்ளார்.

ஒட்டுமொத்தமாக மக்களவையில் உள்ள 543 தொகுதிகளில் பாஜக கூட்டணி 296 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 228 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். மற்ற கட்சிகள் 19 இடங்களில் முன்னிலையில் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி தலா ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளன. பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கோவையில் பின்னடவைச் சந்தித்துள்ளார்.

click me!