மாம்பழ சின்னம் எனக்கு தான் வேண்டும்.. தேர்தல் ஆணையத்தில் அடம் பிடிக்கும் ராமதாஸ்..

Published : Nov 12, 2025, 11:41 AM IST
Ramadoss

சுருக்கம்

தனது தலைமையின் கீழ் செயல்படும் பாட்டாளி மக்கள் கட்சிக்கே மாம்பழம் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் உள்ளிட்ட தேர்தல்களில் அவர்களின் சின்னத்தில் போட்டியிடுவார்கள். அதே நேரத்தில் தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெறாத கட்சிகள் பொது சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து சின்னம் பெற வேண்டும்.

அந்த வகையில் தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தற்போது தேர்தல் ஆணையத்தில் பொது சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என ஆணையம் அறிவித்திருந்தது. இதனிடையே தனது தலைமையிலான பாமகவிற்கு மாம்பழ சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு அதன் நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார்.

ராமதாஸ் எழுதிய கடிதத்தில், 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை வேட்பாளர்களின் படிவங்களில் கையொப்பமிட தனக்கே அதிகாரம் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் பாமகவின் தலைவராக கடந்த மே 5ம் தேதி முதல் பொறுப்பு வகித்து வருகின்றேன். எனது தலைமையிலான பாமகவிற்கே மாம்பழம் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும். சின்னம் வழங்கப்பட்டதற்கான தகவலை எங்கள் முகவரிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!