அடி தூள்! 2026ஆம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை! தமிழக அரசு சர்ப்ரைஸ் அறிவிப்பு!

Published : Nov 11, 2025, 10:43 PM IST
Public holiday

சுருக்கம்

தமிழ்நாடு அரசு 2026-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்காக மொத்தம் 24 நாட்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான 2026-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 25-ஆம் தேதி வரை மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விடுமுறை நாட்கள் அரசுத் துறைகள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். மேலும், ஏப்ரல் 1 (வங்கிகளின் ஆண்டுக் கணக்கு முடிப்பு) உள்ளிட்ட சில தினங்கள் வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே விடுமுறையாக இருக்கும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2026-ஆம் ஆண்டுக்கான முக்கிய பொது விடுமுறைகள் விவரம்:

ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், தைப்பூசம், குடியரசு தினம், தெலுங்கு வருடப் பிறப்பு, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழப் புத்தாண்டு, ரம்ஜான், மே தினம், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மிலாது நபி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகியவை பொது விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மாத வாரியான விடுமுறைகள்:

அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 5 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. மார்ச், ஏப்ரல் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் தலா 3 நாட்கள் பொது விடுமுறை வருகிறது.  ஏப்ரல் 1-ஆம் தேதி (வங்கிகளின் ஆண்டுக் கணக்கு முடிவு) வணிகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் பொது விடுமுறையாகும்.

தைப்பூசம் மற்றும் முக்கியப் பண்டிகையான தீபாவளி பண்டிகை இரண்டும் 2026-ஆம் ஆண்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திமுக கூட்டணியில் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!
அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!