சென்னையில் யாரை சந்தித்தார் ராமதாஸ்.! ரகசிய பயணத்தின் பின்னனி என்ன.?

Published : Jun 08, 2025, 08:44 AM IST
ramadoss

சுருக்கம்

பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே அதிகார மோதல் தொடரும் நிலையில், ராமதாஸ் பாஜக ஆதரவாளர் குருமூர்த்தியை சந்தித்துள்ளார். 

பாமகவில் நீடிக்கும் உட்கட்சி மோதல்- ராமதாஸ் ரகசிய திட்டம் என்ன.? தமிழகத்தில் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் களப்பணியை தொடங்கியுள்ள நிலையில், பாமகவில் அப்பா- மகன் இடையே அதிகார மோதல் தலை தூக்கியுள்ளது. அந்த வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக- பாஜக தனித்து தேர்தலை எதிர்கொண்ட போது ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டார். ஆனால் அன்புமணியோ பாஜகவோடு கூட்டணியை உறுதி செய்தார். 

இதனால் அன்புமணி - ராமதாஸ் இடையே மோதல் தலை தூக்கியது. இதனையடுத்து பாமக இளைஞர் அணி தலைவராக தனது பேரன் முகுந்தனை ராமதாஸ் நியமித்தார். ஆனால் அன்புமணியோ இதனை ஏற்றுக்கொள்ளாமல் பொதுக்குழு மேடையிலேயே ராமாதாசுக்கு எதிராக சீறினார்.

ராமதாஸ்- அன்புமணி மோதல்

இந்த மோதல் போக்கு தொடர்ந்து வந்த நிலையில் கடந்த மாதம் திடீரென அன்புமணியை பாமக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, தான் தான் பாமக தலைவர் என ராமதாஸ் அறிவித்தார். அடுத்தடுத்து அன்புமணி மீது பகீர் புகார்களை ராமதாஸ் பகிரங்கமாக தெரிவித்தார். இதனால் இரு தரப்பிற்கும் மோதல் வலுத்தது. இந்த சூழ்நிலையில் ராமதாஸை சமாதானம் செய்ய பலரும் முயன்றனர். ஆனால் எதற்கும் பிடி கொடுக்காமல் ராமதாஸ் தனது செயல்பாட்டில் உறுதியாக இருந்தார். இந்த நிலையில் பாஜகவின் ஆதரவாளரும், அமித்ஷாவின் நண்பருமான ஆடிட்டர் குருமூர்த்தி தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று ராமதாஸை சந்தித்து பேசினார்.

ராமதாஸ் சென்னையில் யாரை சந்தித்தார்

ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பிற்கு முன்னதாக அன்புமணியும் ராமதாஸை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று காலை தைலாபுரத்தில் இருந்து சென்னைக்கு திடீரென புறப்பட்டார் ராமதாஸ், யாரை சந்திக்க போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அந்த வகையில் பாமக கூட்டணி தொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தியுடன் ராமதாஸ் சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. முதலில் கோட்டூர்கார்டனில் ராமதாஸின் உறவினர் வீட்டில் சில மணி தங்கி இருந்த ராமதாஸ் அடுத்தாக சென்னை தியாகராய நகரில் உள்ள நார்த் போக் சாலையில் உள்ள ஏகே மூர்த்தியின் மகன் வழக்கறிஞர் விஜய் மகேஷ் இல்லத்திற்கு சென்றார். அங்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது..

அமித்ஷாவை சந்திக்க திட்டமா.?

இதனை தொடர்ந்து வெளியே வந்த ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், என்னுடைய கொள்ளு பேரனை சந்திக்க வந்தேன். மீண்டும் குருமூர்த்தியை சந்தித்ததாக கூறப்படுகிறது எந்த அளவிற்கு உண்மை என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தைலாபுரத்திற்கு வாங்க சொல்கிறேன் என்று பதில் அளித்தார். இதனை தொடர்ந்து மதுரை வந்துள்ள பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு இல்லை என்று பதிலளித்து விட்டு ராமதாஸ் சென்றார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தர்கா தவிர்த்து மற்ற இடமெல்லாம் இந்துக்களுடையது..! நீதிமன்றமே சொல்லிவிட்டது... அண்ணாமலை பேட்டி
ரேஷன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! மிஸ்பண்ணிடாதீங்க மக்களே!