குழந்தைகளின் உடல் நலனில் விளையாட வேண்டாம்...! உடனடியாக பள்ளிக்கு விடுமுறை அறிவியுங்கள் - ராமதாஸ்

By Ajmal KhanFirst Published Sep 19, 2022, 11:27 AM IST
Highlights

தமிழகத்தில் காய்ச்சல் அதிகரித்து வரும நிலையில், பள்ளிக்குழந்தைகளின் உடல் நலனில் விளையாடாமல் உடனடியாக பள்ளிக்கு விடுமுறை அறிவியுங்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். 
 

தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல்

தமிழகத்தில் நாளுக்கு நாள் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட வேண்டும் என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் இLTகருத்தை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  தமிழ்நாட்டில் சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நோய்பரவலைத் தடுக்க  சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.  3 நாட்களில் காய்ச்சல் சரியாகிவிடும்  என்று ஆறுதல் கூறுவது மட்டுமே போதுமானதல்ல! காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க வேண்டியது அவசியம். 

ஆ.ராசாவை கைவிட்ட திமுக.!ஆதரவாக சீமானை தொடர்ந்து களத்தில் இறங்கிய வேல்முருகன்.. இந்து அமைப்புகளுக்கு எச்சரிக்கை

 பள்ளிக்கு விடுமுறை அறிவியுங்கள்

பள்ளிகளில் குழந்தைகள் நெருக்கமாக அமர்ந்திருப்பதாலும், ஒன்று கூடி விளையாடுவதாலும் காய்ச்சல் பரவுகிறது  என்பதை மருத்துவ வல்லுனர்கள் உறுதி செய்திருக்கின்றனர்! புதுச்சேரியில் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் அங்கு குழந்தைகளிடையே காய்ச்சல் பரவுவது குறைந்திருக்கிறது.  தமிழ்நாட்டிலும் நோய்ப்பரவல் சங்கிலியை  உடைக்க வேண்டுமானால் பள்ளிகளுக்கு விடுமுறை  அறிவிக்க வேண்டியது  அவசியமாகும்! மாணவர்களுக்கு கல்வி அவசியம்; அவர்களின் உடல்நலனைக் காக்க வேண்டியது  மேலும் அவசியம். இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது.  எனவே, 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்; மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும்  என மீண்டும் வலியுறுத்துவதாக கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

முக கவசத்தை கட்டாயமாக்குங்க..! குழந்தைகளை தாக்கும் காய்ச்சல்.. அரசுக்கு கோரிக்கை வைத்த அண்ணாமலை


 

click me!