
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் பெருவிழா மாநாடானது மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியில் ஏற்கனதே தந்தை, மகன் இடையே அதிகார மோதல் நீடித்து வரும் நிலையில் யார் தலைமையில் அதிகமான கூட்டம் கூடுகிறது என்பதை காட்ட வேண்டிய கட்டாயத்தில் தந்தை, மகன் என இருவருமே தள்ளப்பட்டுள்ளனர்.
முன்னதாக சனிக்கிழமை கட்சியின் தலைவர் அன்புமணி நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் பெருவாரியான கூட்டத்தை கூட்டி மாஸ் கான்பித்தார். இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக் கிழமை கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நடத்திய மாநாட்டிலும் கூட்டம் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாகவே இருந்தது.
மகளிர் மாநாட்டில் பேசிய ராமதாஸ், “போதைப் பொருட்ககளைத் தடுப்பதில் தமிழக மக்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். தமிழகத்தில் மது, கஞ்சா போன்ற தீமை ஒழிய வேண்டும். அதை செய்து காட்டுவது பெரிய காரியம் கிடையாது. என்னுடன் 10 அதிகாரிகளை அனுப்புங்கள் நான் சொல்வதைக் கேட்டாலே அந்த இரு தீமைகளும் ஒழிக்கப்பட்டுவிடும்.
என் அருமை நண்பர் கருணாநிதி 20 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி வரலாற்றில் இடம் பிடித்தார். நமது அண்டை மாநிலங்களில் சாதிவாரி கண்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது?
தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தில் 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை வழங்க நடவக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நாங்கள் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு தாங்காது. உள் ஒதுக்கீடு கேட்டு 7 நாட்கள் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு தாங்காது. 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி கூட்டணி அமைப்பேன். பாமக.வில் நான் சொல்வது மட்டுமே நடக்கும். வேறு யார் என்ன சொன்னாலும் நீங்கள் அதனை காதில் வாங்க வேண்டாம் என்றார்.