களைகட்டிய ரம்ஜான் பண்டிகை.. புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை.. கட்டித்தழுவி அன்பை பரிமாறிய இஸ்லாமியர்கள்!

By vinoth kumarFirst Published Apr 11, 2024, 10:34 AM IST
Highlights

ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள்  ரம்ஜான் பண்டிகைக்கு முன்பு ஒரு மாத காலம் நோன்பு இருப்பது மரபு. நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமலும், தொண்டையில் எச்சில் கூட விழுங்காமலும் மிகக் கடுமையான நோன்பு இருந்து ரமலானை கொண்டாடுவார்கள். 

தமிழ்நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று கோலாகல கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி அன்பை பரிமாறி கொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள்  ரம்ஜான் பண்டிகைக்கு முன்பு ஒரு மாத காலம் நோன்பு இருப்பது மரபு. நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமலும், தொண்டையில் எச்சில் கூட விழுங்காமலும் மிகக் கடுமையான நோன்பு இருந்து ரமலானை கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்தார். 

இதையும் படிங்க: திருச்சியில் சிறப்பு தொழுகை; ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்திய இஸ்லாமியர்கள்

அதன்படி,  இன்று அதிகாலையிலேயே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.  சிறப்பு தொழுகைக்கு பின்னர் இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி அன்பை பரிமாறி கொண்டனர். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, தென்காசி உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: நெல்லை மக்களவை தொகுதி தேர்தல் ரத்தாகிறதா? என்ன காரணம்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்!

அதேபோல் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பள்ளிவாசல் அருகாமையில் இருக்கும் ஈத்கா மைதானம், மந்தக்கரை யூமியா ஜாமி மஸ்ஜித் பள்ளிவாசல், பாகர்ஷா வீதி பாகர்ஷா மஸ்ஜித் பள்ளிவாசல், வண்டிமேடு மண்டி மஹல்லா மஸ்ஜித் பள்ளிவாசல், வடக்கு தெரு ஷெரீப் மஹல்லா மஸ்ஜித் பள்ளிவாசல், வாலாஜா மஸ்ஜித் பள்ளிவாசல், மருதூர் தக்வா மஸ்ஜித் பள்ளிவாசல், புதுச்சேரி சாலையில் உள்ள ரஹ்மான் மஸ்ஜித் பள்ளிவாசல் உள்பட விழுப்புரம் நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். திருச்சியில் மரக்கடை பகுதியில் உள்ள அரசு சையத் முதுஷா மேல்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர் இணைந்து தொழுகையில் ஈடுபட்டனர். 

click me!