ரஜினிகாந்த் உடம்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு…. கிட்னியில் பாதிப்பு…? வெளியான புதிய தகவல்…!

By manimegalai aFirst Published Oct 29, 2021, 6:58 AM IST
Highlights

சிறுநீரகத்தின் செயல்பாடு திடீரென குறைந்ததால் நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

சிறுநீரகத்தின் செயல்பாடு திடீரென குறைந்ததால் நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சேவையை பாராட்டு மத்திய அரசானது அவருக்கு மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்தது. துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி ரஜினிகாந்துக்கு விருதை வழங்கினார்.

அதன் பின்னர் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து விருது பெற்றமைக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். பிறகு குடும்பத்துடன் அவர் சென்னை திரும்பினார்.

டெல்லி பயணம் முடிந்து சென்னை வந்த அவர் குடும்பத்துடன் அண்ணாத்த படத்தை பார்த்து மகிழ்ந்ததாக hoote ஆப்பில் பதிவிட்டு இருந்தார். இந் நிலையில் நேற்று மாலை திடீரென சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் அட்மிட் ஆகி இருப்பதாக பரபரப்பான தகவல் வெளியானது.

என்ன ஆச்சு தலைவருக்கு…? அண்ணாத்த உடம்புக்கு என்ன? என்று ரசிகர்களும், திரையுலகத்தினரும் பதறினர். மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அட்மிட் செய்யப்பட்டது உண்மை தான் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை அவரது மனைவி லதா ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஆண்டு தோறும் ரஜினிகாந்துக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டுக்கான முழு உடல் பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் நலமுடன் இருக்கிறார் என்று அறிவித்தார்.

லதா ரஜினிகாந்த் அறிவித்துவிட்டாலும் அவரது உடலுக்கு என்னதான் கோளாறு? எதற்காக இந்த திடீர் அட்மிட் என்ற கேள்விகள் துளைத்தெடுக்க ரசிகர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்தனர். தலைவர் உடல்நலம் பூரண குணமாக வேண்டும் என்று அவரது ரசிகர்கள், திரையுலகத்தினர் உள்பட பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந் நிலையில் அவரது உடல்நிலையில் என்ன பிரச்சனை? திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம் என்ற கேள்விகளுக்கு புதிய தகவல்கள் பதில்களாக அமைந்துள்ளன.

ரஜினிகாந்த் உடம்பில் ரத்த குழாயில் திடீரென அடைப்பு ஏற்பட்டு,  ரத்த ஓட்டம் தடைப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு மாற்றப்பட்ட சிறுநீரகத்தின் செயல்திறன் திடீரென குறைந்ததால் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் மருத்துவமனையில் இருந்து ரஜினிகாந்த் உடல்நிலையில் என்ன பிரச்னை என்பது பற்றிய எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

இருப்பினும், ரஜினிகாந்தின் உடலில் ஏற்பட்ட கோளாறுகள் குறித்தும், அவரது உடல்நலம் குறித்தும் ரசிகர்கள் கவலை கொண்டு மன்ற தலைமையை அணுக ஆரம்பித்தனர். ரசிகர்கள் மத்தியில் பல்விதமாக தகவல்கள் பகிரப்பட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகியான சுதாகர் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில் தலைவர் நலமாக இருக்கிறார், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிதவித்துள்ளார். எது எப்படி என்றாலும் அவர் பூரண நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

 

தலைவர் நலமாக இருக்கின்றார் , வதந்திகளை நம்பவேண்டம்

— Sudhakar (@SudhakarVM)

 

click me!