
சும்மா ராஜினாமா செய்...ராஜினமா செய்யுன்னு.....நிறுத்துங்கபா....மாஸ் காட்டிய ரஜினி
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 100 நாட்களாக நடைப்பெற்ற போராட்டத்தில், கடைசி நிமிடத்தில் வன்முறை வெடித்தது.
இதில்13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் தூத்துக்குடிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்டவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து,பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது,
"ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை வெடித்ததற்கு சமூக விரோதிகள் தான் காரணம் என்று ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து சிலர் போராட்டங்களை தூண்டி விடுகின்றனர்
இனிமேலாவது கவனமாக இருக்க வேண்டும்..நேர்மையாக நடந்த சமூக விரோதிகள் மற்றும் விஷ கிருமிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.
சமூக விரோதிகளை முன்னாள் முதலைச்சர் ஜெயலலிதா அடக்கி வைத்து இருந்தார்
போராட்டம் நடத்தும் போது மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
போராட்டம் நடத்த அனுமதி கொடுக்கும் அரசும் பாதுகாப்பு வழங்க வேண்டும்...என தெரிவித்து உள்ளார்
சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்காவிட்டால் தமிழகத்திற்கு பேராபத்து ஏற்படும்...
ஸ்டெர்லைட் ஆலையை இனி திறக்க கூடாது.....எந்த அரசும் அதற்கு அனுமதியும் கொடுக்காது ..
தொடர்ந்து எல்லா வற்றிற்கும் போராட்டம் நடைபெற்றால் தமிழகத்தில் எப்படி தொழில் வளர்ச்சி அடையும் ......? எனவே, எதனை அனுமதிக்க வேண்டும் ..எதனை அனுமதிக்க கூடாது என்பதை தீர ஆராய்ந்து பின்னர் தான், தமிழகத்தில் தொழிற்சாலை நிறுவ அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளார்.